Connect with us

இதுதானா உங்க ‘டக்கு’: பிரதமரை கிண்டல் செய்த கமல்

செய்திகள்

இதுதானா உங்க ‘டக்கு’: பிரதமரை கிண்டல் செய்த கமல்

உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் சற்று முன்னர் பிரதமரின் டார்ச்லைட் குறித்து கேலியும் கிண்டலும் கூடிய ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்

இந்த டுவீட் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி, கமல் டுவீட்டுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்கள் பதிவாகி வருகிறது

கமலஹாசன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:பிரதமர் பேசுகிறார் என்றதும் நான் அதிகம் எதிர்பார்த்தேன். பாதுகாப்புக்கவசங்கள் தட்டுப்பாடுக்கான தீர்வு, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி விநியோகம், ஏழைமக்களின் வாழ்வாதாரம், வருங்கால பொருளாதார நடவடிக்கை என, ஆனால் நாம் என்றோ கையில் எடுத்த டார்ச்சுக்கே அவர் இன்றுதான் வருகிறார்

இதுதானா உங்கள் ‘டக்கு’ என்று பிரதமரை கமல் கிண்டல் செய்திருப்பதாக நெட்டிசன்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

Continue Reading

அதிகம் படித்தவை

To Top