கமல் பேசிய கருத்து- விவேக் ஓபராய் கடும் கண்டனம்

இன்றைய டுவிட்டர் டிரெண்டிங்கில் கமல்தான் உள்ளார். தேவையில்லாமல் நாதுராம் கோட்சேவை எதிர்க்கிறேன் என்ற பெயரில் ஹிந்து மக்களை அவர் தீவிரவாதி என்று சொன்னதற்கு பல ஹிந்து அமைப்பு தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சில மணி நேரத்துக்கு முன் பாரதிய ஜனதா தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மிக கடுமையான கண்டனத்தை கமலுக்கு எதிராக பதிவு செய்துள்ளார்.

பிரபல ஹிந்தி நடிகரும் சுனாமியின் போது கடலூர் மாவட்டத்தில் பல கிராமங்களை தத்தெடுத்து உதவி செய்த விவேக் ஓபராய் கமலின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோட்சேவை பயங்கரவாதி என கூறும் கமல் இந்து என ஏன் குறிப்பிட வேண்டும் என கமல்ஹாசனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் வாக்குகளை பெறுவதற்கான முயற்சியா எனவும் பதிவிட்டுள்ள விவேக் ஓபராய் நாட்டை பிளவுபடுத்த வேண்டாம், நாம் அனைவரும் ஒன்று என கூறியுள்ளார்.