Connect with us

அனைத்து கட்சி கூட்டம் முடிந்த பின்னர் செல்வதாக கூறும் கமல்

செய்திகள்

அனைத்து கட்சி கூட்டம் முடிந்த பின்னர் செல்வதாக கூறும் கமல்

காவிரி நதி நீர் பிரச்சனைக்காக இன்று சென்னை தலைமைசெயலகத்தில் கூடிய அனைத்து கட்சி கூட்டம் முடிவடைந்துள்ள நிலையில், அழைப்பு விடுத்தால் அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொள்வேன் என்று கமல் கூறியிருப்பது செய்தியாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மதுரையில் இன்று காலை 11 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த கமல்ஹாசன், தமிழக அரசு காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியிருப்பதாகவும் , அதில் கலந்துக் கொள்ள அனுமதித்தால் கலந்து கொள்வேன் என்றும் கூறினார். ஆனால் அவர் கூறிய அந்த நேரத்தில் சென்னையில் அனைத்து கட்சி கூட்டம் நடந்து கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

ஒரு முக்கிய பிரச்சனைக்காக கூடியுள்ள அனைத்து கட்சி கூட்டம் எப்போது நடக்கவுள்ளது என்பது குறித்தே கமல் தெரிந்து கொள்ளாமல் இருந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

Continue Reading
To Top