ரஜினிக்கு கமல் செய்த உதவி

ரஜினி விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக சொல்லப்படுகிறது.கமல் தனது மய்யம் கட்சியை தொடங்கி தொடர்ந்து நடத்தி வருகிறார். இருவரின் அரசியல் வேறு வேறு நிலைப்பாடு இதை இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இவர்கள் அந்தக்காலத்தில் இருந்தே அதிக படங்களில் சேர்ந்து நடித்து விட்டனர் இருவரின் குருநாதரும் பாலச்சந்தர். இருவரும் நெருங்கிய நண்பர்கள்

ஒரு முறை ஊட்டியில் கேமரா இல்லாமல் நின்று போன முள்ளும் மலரும் ஷூட்டிங்கை தான் அருகில் நடித்து கொண்டிருந்த சட்டம் என் கையில் படத்தை நிறுத்திவிட்டு தன் கேமராவை கொடுத்து பாடல் காட்சி மற்றும் ரஜினியின் காட்சிகளை எடுக்க உதவினாராம் கமல்.

இதை சுஹாசினி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.