நேற்று திட்டம், இன்று மாற்றம், நாளை திரும்ப பெறுதல்: கமல்ஹாசன் கிண்டல்

இந்த வாரம் எவிக்ஷன் இல்லை- கமல் ஹாசன் திட்டவட்டம்!!

இந்த வாரம் எவிக்ஷன் இல்லை- கமல் ஹாசன் திட்டவட்டம்!!

உலகநாயகன் கமலஹாசன் அவ்வப்போது தமிழக அரசையும் மத்திய அரசையும் விமர்சனம் செய்து வருகிறார் என்பது தெரிந்ததே. மேலும் ஒரு திட்டத்தை எவ்வாறு செயல்படுத்த வேண்டும்? என்ன இந்த மாதிரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்? என்பது குறித்து அரசுக்கு அவர் அறிவுரையும் கூறி வருகிறார்

இந்த நிலையில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டு விட்டு பின்னர் திடீரென அந்த அறிவிப்பை வாபஸ் பெற்று வருவது குறித்து இன்று சற்று முன் வெளியிட்ட டுவீட்டில் அவர் கூறியிருப்பதாவது:

கல்வி, சராசரி குடும்பத்தின் எதிர்காலக் கனவு. எதிர்காலம் சிறக்க நம்பியிருக்கும் ஏணி. அரசு இதில் நேற்றொன்று அறிவித்து, இன்று அதை மாற்றி, நாளை திரும்பப்பெறும், தன் வழக்கத்தை விடுத்து தீர ஆலோசித்து, தரமான கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

சமீபத்தில் ஆன்லைன் வகுப்புகள் உண்டு என்று அறிவித்துவிட்டு அதன்பின் திடீரென ஆன்லைன் வகுப்புகள் இல்லை, டிவி மூலம் மட்டுமே பாடங்கள் நடத்தப்படும் என்று கல்வி அமைச்சர் கூறியதைத்தான் கமல்ஹாசன் சுட்டிக்காட்டுகிறார் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.