தர்ஷனுக்கு ஆதரவு அளித்த கமல் ஹாசன்…

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாத நிலையில், 2ஆவது வாரத்தில் முதலில் வீட்டுக்குள் வந்த ஃபாத்திமா பாபு முதலாவதாக வெளியேற்றப்பட்டார். 


சனி, ஞாயிறுகளில் கமல் ஹாசன் போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்த வாரத்தில் நடந்த பிரச்னைகளை பற்றி பேசி முடித்து அறிவுரை கூறுவார். அவ்வகையில் தர்ஷன் – வனிதா சண்டை குறித்து கேட்டறிந்தார். 

தர்ஷனுக்கு ஆதரவு அளித்த கமல் ஹாசன்…’நான் வனிதா அக்காவை மரியாதையாகத் தான் பேசினேன். அவர்தான் என்னை நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் போன்றவன் நீ என்றார்’ என தர்ஷன் தன் பக்க நியாயத்தை தெரிவித்தார். 

இதுகுறித்து கமல் வனிதாவிடம் விளக்கம் கேட்டார். அதற்கு வயதில் சிறியவன் என்பதான் அவ்வாறு கூறினேன் என்றார். 

பின்னர் பாரதியாரின் கவிதை ஒன்றினை மேற்கோள் காட்டிய கமல், ’நெருப்பில் குழந்தை, பெரியது என்றெல்லாம் இல்லை. சிறு பொறி ஒன்று போதும், காட்டை கொளுத்த. அதுபோல யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது’ என்றார்.