குறும்படத்தில் மாட்டிக் கொண்ட சாக்ஷி!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது, 4 வாரங்களை சிறப்பாக முடித்த நிலையில், 5 வாரத்திற்குள் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்துள்ளனர் போட்டியாளர்கள்.

மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், ஃபாத்திமா பாபு முதலில் வெளியேற்றப்பட்டார். 2ஆவதாக வனிதா வெளியேற்றப்பட்டார். இதையடுத்து, கடந்த வாரம் முழுவதும் சாக்‌ஷி கேப்டனாக இருந்தார். 

குறும்படத்தில் மாட்டிக் கொண்ட சாக்ஷி!

எஞ்சியுள்ள 14 போட்டியாளர்களில் கவின், லோஸ்லியா, மீரா மிதுன் மற்றும் சாக்‌ஷி ஆகியோர் தான் ஒவ்வொரு நாளும் பேசப்பட்டு வருகின்றனர்.

சரி, இன்றைய நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு உண்மையை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. ஆம், அதாவது குறும்படம் வெற்றிகரமாகப் போடப்பட்டது.

இதில், அனைவருமே குறும்படத்திற்காக காத்துக்கொண்டிருப்பதாக சேரனும் சாண்டியும் தெரிவிக்கின்றனர். குறும்படமா? என்று ஒருவித நக்கல் தோரணையில் கேட்கும் கமல் ஹாசன் குறும்படத்தைப் போட்டுவிட்டார்.

அதில் சாக்ஷிதான் மீட்டிங்க் போடச் சொன்னார் என்பது தெளிவாகிவிட்டது. அது சக போட்டியாளர்களை அதிர்ச்சியாக்கிவிட்டது. ஆனால் இது ரசிகர்களுக்கு வரப் பிரசாதமாக இருந்தது, கரவொலி எழுப்பி ஆதரவினைத் தெரிவித்தனர்.