Connect with us

கவினை கேள்வி கேட்டு தடுமாற வைத்த கமல் ஹாசன்!!

பொழுதுபோக்கு

கவினை கேள்வி கேட்டு தடுமாற வைத்த கமல் ஹாசன்!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி, விறுவிறுப்பாக இறுதிக் கட்டத்தினை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது. 17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் இன்னும் 7 போட்டியாளர்களே மீதம் உள்ளனர்.

வார இறுதியான நேற்று கமல் ஹாசன் கவினிடம், சாண்டியிடம் சண்டையிட்டது குறித்துக் கேட்டார். அப்போது பேசிய கவின், “டாஸ்க்கினை டாஸ்க்காக மட்டுமே பார்த்தேன், ஆனால் அதையும் தாண்டிய உணர்வு உள்ளது.

தர்சன் லாஸ்லியாவினை விளையாட்டின்போது, கீழே இடித்துத் தள்ளும்போது, எனக்கு பெரிய அளவில் வருத்தமாக இல்லை. ஆனால் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே சாண்டி, விளையாடும்போது சாண்டி லாஸ்லியாவினை கீழே இடித்து தள்ளிவிட்டார்.

அதனால் டாஸ்க்கினை மீறியும், மனதிற்குள் கஷ்டமாக உள்ளது.” என்றார். அப்போது கமல் ஹாசன் இந்த உணர்வு தர்சனுக்கு அடிபட்டபோது வரவில்லையே” என்றார் கமல் ஹாசன்.

அப்போது திணறினார் கவின், அப்போது மறுபுறம் தர்சனும் சாண்டியும் சிரித்தனர், கமல் ஹாசன் பரவாயில்லை விடுங்கள், அது வேறு மாதிரியான உணர்வு இது வேறு மாதிரியான உணர்வு என்று பதிலளித்தார்.

பார்வையாளர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top