சாக்ஷிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கமல் ஹாசன்!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் 3 நிகழ்ச்சி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது, 4 வாரங்களை சிறப்பாக முடித்த நிலையில், 5 வாரத்திற்குள் வெற்றிகரமாக காலடி எடுத்து வைத்துள்ளனர் போட்டியாளர்கள்.

வனிதா இருந்தவரை 24 மணி நேரமும் அவரையே பார்த்திருந்த கேமிரா, அவர் போன பின் மீராவை கவனிக்க ஆரம்பித்தது. அய்யோ சாரிங்க… மீரா கவனிக்க வெச்சார்னு சொல்லலாம். அதுக்கு அப்புறம் அந்த இடத்தை கெட்டியா புடிச்சுகிட்டார் விளையாட்டுப் பிள்ளை  கவின்.

சாக்ஷிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன கமல் ஹாசன்!!!

விளையாட்டுன்னா விளையாட்டு அப்படி ஒரு விளையாட்டு.. 4 பெண்களைக் காதலிப்பது, அதில் ஒரு பெண்ணிடம் காதலை வெளிப்படுத்துவது, 3 நாட்களுக்குப் பின் ப்ரேக் அப் செய்வது, மற்றொரு பெண்ணிடம் காதலில் விழுவது, கடைசியில் இது நட்பு மட்டுமே என்று கூறுவது என தீராத அவருடைய விளையாட்டுக்கே எல்லை இல்லை எனலாம்.

சாக்‌ஷி நேற்று தனது 29ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிக் பாஸ் முதல் போட்டியாளர்கள் பலரும் பிறந்தநாள் வாழ்த்து கூற, கேக் வெட்டி கொண்டாடினர். சாக்‌ஷியின் குடும்பத்தினரும் அவருக்கு வாழ்த்து கூறினர். இதற்கிடையில் இயற்கையில் வரப்பிரசாதமாக மழையும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதாக சேரன் தெரிவித்துள்ளார். 

பிறகு வழக்கம் போல் வார இறுதி நாட்கள் என்பதால், கமல் ஹாசனின் சந்திப்பு நடந்தது. முதலில் கமல் ஹாசன் சாக்‌ஷிக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது. சார், கடந்தாண்டு தலைவர் தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதாகவும், இந்தாண்டு உலகநாயகன் வாழ்த்து கூறியதை மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.