வனிதாவை கார்னர் செய்த கமல் ஹாசன்…

பிக் பாஸ் சீசன் 3 வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. மொத்தம் 16 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர்.

நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் பள்ளி ஆசிரியர் போல அனைவருக்கும் பாடம் நடத்தினார். 

சனி, ஞாயிறுகளில் கமல் ஹாசன் போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்த வாரத்தில் நடந்த பிரச்னைகளை பற்றி பேசி முடித்து அறிவுரை கூறுவார். அவ்வகையில் தர்ஷன் – வனிதா சண்டை குறித்து கேட்டறிந்தார். 

வனிதாவை கார்னர் செய்த கமல்ஹாசன்…

அதாவது இரண்டு நாட்கள் முன்னதாக லக்ஸரி பட்ஜெட் டாஸ்கில் சிறப்பாக செயல்பட்டதாக ஹவுஸ் மேட்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சாக்ஷி, மோகன் வைத்தியா, வனிதா ஆகியோர் கலந்து கொண்டனர். 

இந்த டாஸ்கில் இவர்கள் மூன்று பேருக்கும் ஒரு வெல்க்ரோ உடன் கூடிய ஜாக்கெட் கொடுக்கப்பட்டது. மற்றொர வெல்க்ரோ ஸ்டிக்கரும் கொடுக்கப்பட்டது. யார் உடம்பில் பஸர் அடிக்கும்போது ஓட்டப்பட்டிருந்தோ அவர்கள் தோல்வியடைந்தவர்கள் என அறிவிக்கப்பட்டது. 

முதலில் மோகன் வைத்தியா இதை முயற்சி செய்தார் ஆனால் அவரால் யார் மீதும் ஒட்ட முடியவில்லை. அடுத்தாக விளையாடி வனிதா மற்றும் சாக்ஷியில் சாக்ஷி வனிதா மீது அந்த ஸ்டிக்கரை ஓட்டினார். ஆனால் வனிதா அதன் பின் அந்த டாஸ்க் முறையாக அமைக்கப்பட்வில்லை என குற்றம்சாட்டி அந்த டாஸ்கில் இருந்து விலகினார். இதற்கிடையில் தர்ஷனிற்கும், வனிதாவிற்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இறுதியாக சாக்ஷி அடுத்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதுகுறித்து கேள்விகளை கேட்டு கமல் ஹாசன் வனிதாவை டார்கெட் செய்தார். இதனால் என்ன செய்வது என்று அறியாது ரொம்ப சாந்தமான பெண் போல் சிரித்துக் கொண்டிருந்தார் வனிதா.