ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கமல்! அப்ப சொன்னது என்னாச்சி?

சமீபத்தில் அப்துல்கலாம் இல்லத்தில் இருந்து அரசியல் பயணத்தை ஆரம்பித்த நடிகர் கமல்ஹாசன், அப்துல் கலாம் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல் அவரது இல்லத்தில் இருந்து மட்டும் அரசியல் கட்சி தொடங்குவது ஏன் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் வழக்கம் எனக்கு இல்லை என்று கூறினார்

இந்த நிலையில் இயக்குனர் ஆர்.சி.சக்தி, சிவாஜி கணேசன் ஆகியோர்களின் மறைவின்போது அவர்களது இறுதி ஊர்வலத்தில் கமல் கலந்து கொண்டதை நெட்டிசன்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த நிலையில் கடந்த சனியன்று மரணம் அடைந்த ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக கமல் இன்று மும்பை கிளம்பியுள்ளார். இதுகுறித்த கேள்விக்கு தான் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்த மட்டுமே செல்வதாக கூறி சமாளித்தார். அப்படியென்றால் அப்துல்கலாம் அவர்களுக்கும் அஞ்சலி செலுத்தியிருக்கலாமே என்பதுதான் தற்போதைய நெட்டிசன்களின் கேள்வியாக உள்ளது