ஆதரவு தெரிக்கின்றாரா? கண்டனம் தெரிவிக்கின்றாரா? கமலின் குழப்பமான டுவீட்

தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கந்த சஷ்டி கவசத்தை அவதூறு செய்த கருப்பர் கூட்டம் குறித்த செய்திகளும், பெரியார் சிலைக்கு காவி வண்ணம் பூசிய செய்திகளும் தலைப்புச் செய்திகளாக இடம்பெற்று வருகின்றன

தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறாக வீடியோ வெளியிட்ட கருப்பர் கூட்டம் குழுவினர்களுக்கு கண்டனம் தெரிவித்து வந்தனர்

ஒரு சில முக்கிய தலைவர்கள் மட்டுமே இது குறித்து கண்டனம் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில் அதே தலைவர்கள் பெரியார் சிலை உடைக்கப்பட்ட ஒரு சில மணி நேரத்திற்குள் தங்களது கண்டனங்களை தெரிவித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கருப்புகூட்டம் மற்றும் கந்த சஷ்டி கவசம் ஆகிய இரண்டு பிரச்சனைகள் குறித்தும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசன் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார் அந்த டுவிட் பின்வருமாறு: தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இயைந்து வாழும் சமூகம் தான் அறிவார்ந்த, மேம்பட்ட சமூகம். இன்று நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது.

இந்த டுவீட்டில் அவர் கருப்பர் கூட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறாரா? அல்லது கண்டனம் தெரிவிக்கின்றாரா? என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாத அளவில் உள்ளதாக நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்