தேசிய கொடி மூவண்ணமாக இருக்கணும் ஒரு வண்ணமாக கூடாது- கமல்

கமல்ஹாசன் கடந்த ஆண்டு ராமேஸ்வரத்தில் தனது பயணத்தை துவக்கி மதுரையில் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆரம்பித்தார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் ஏதாவது பேசி மாட்டிக்கொள்வது கமலின் வழக்கம்.

இப்படித்தான் கமல் நேற்று அரவக்குறிச்சி இடைத்தேர்தலை ஒட்டி வாக்கு சேகரித்த போது. இந்தியாவின் முதல் பயங்கரவாதமே இந்து தீவிரவாதிதான் என்று பேசினார். அதாவது மஹாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேயைத்தான் அவர் அவ்வாறு கூறியுள்ளார்.

மோடியை நாடினால் நல்லது நடக்கும் என கூறுகின்றனர். உள்ளூர் மக்களுக்கு என்ன தேவை இருக்கிறதோ அதை பற்றியே பேச வேண்டும் என கூறியுள்ளார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது வந்த முதல் குரல் என் குரல்தான். பயங்கரவாதம் இரு தரப்பிலும் இருக்கிறது. பிரித்தாளும் சூழ்ச்சி வேண்டாம்.

என்னுடைய ஹே ராம் படத்திலேயே இப்படியெல்லாம் பயங்கரம் நடக்குமோ என சொல்லிவிட்டேன் என கமல் பேசியுள்ளார்.

தேசியக்கொடியின் நிறம் மூவண்ணமாகவே இருக்க வேண்டும் ஒரு வண்ணமாக மாறக்கூடாது என கமல் பேசியுள்ளார்.

கமலின் பேச்சு சர்ச்சைக்குரியது அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் கூறியுள்ளார்.