கமலின் சர்ச்சை குறித்து கஸ்தூரி பதில்

சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி இந்துதான் என்று கோட்சேயை சொல்கிறேன் என்ற அடிப்படையில் கமல் கூறி இருந்தார். இது இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் அரவக்குறிச்சி தொகுதியில் சென்று இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் கமல் இப்படி கூறியதால்

இன்றைய சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கிறார் கமல். பலர் கமலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை கஸ்தூரியும் கமலின் கருத்தை ஆதரிக்கவில்லை.

அவர் டுவிட்டரில் கூறி இருப்பது, கமலின் பெரும்பாலான கருத்துக்களை ஆதரிக்கிறேன் அவரின் கருத்துக்களோடு ஒத்துப்போய் இருக்கிறேன். அவரின் பெரிய சப்போர்ட்டர் நான்

பிளவு பட்ட அரசியல் நிறைந்த நாட்டில் அவரது நேர்மறை அரசியலை ஆதரித்து வந்தேன்.அவர் குறிப்பிட்ட ஒரு சமூகத்தை குறிப்பிட்டு பேசியது வருத்தமாக உள்ளது என்று கஸ்தூரி கூறி உள்ளார்.