கிரேஸி மோகன் இறுதிசடங்கு -கமலை எதிர்த்தவருக்கு பதிலடி கொடுத்த ரசிகர்

நேற்று முன் தினம் நாடக நடிகரும் ஒருங்கிணைப்பாளரும், சினிமா வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் அவர்கள் காலமானார். கமலஹாசனின் பல படங்களுக்கு கிரேஸி மோகனின் வசனமே பிரதானம்.

மிகவும் மகிழ்ச்சியாக இவரது காமெடி இருக்கும். யாரையும் நேர்மறையாக மட்டுமே பேசுவார் எதிர்மறையாக பேச மாட்டார்.

கமலும் இவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் என்பதை விட நெருங்கிய சகோதரர்கள் போன்றவர்கள் என்பதை கமலே நேற்று முன் தினம் டுவிட்டில் கூறி இருந்தார்.

நேற்று நடந்த கிரேஸி மோகன் இறுதிச்சடங்கில் கலந்து கொண்டார் கமல் . இதை கிண்டல் செய்து வரும் நெட்டிசன்கள் அப்துல் கலாம் இறந்த போது இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளும் வழக்கமில்லை என கூறினாரே இப்போது ஏன் கலந்து கொள்கிறார் என கேட்டு வருகின்றனர்.

இதற்கு பதில் கூறிய கமல் ஆதரவாளர் ஒருவர் மோகன் அவர்கள் எனது சகோதரர் என்று கமல் கூறியுள்ளார் சகோதரர் இறுதி ஊர்வலத்தில் கொண்டது தவறு என்றால் உங்களை என்ன செய்வது என்று பதில் கொடுத்து வருகிறார்.