கமல் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும் -வடிவேலு

நேற்று திருச்செந்தூரில் செய்தியாளர்களை சந்தித்த வடிவேல் 2021ல் நான் தான் சிஎம் என நகைச்சுவையாக கூறினார். இது சமூகவலைதளங்களில் 2021ல் நான் தான் சிஎம் என்று டாப் ட்ரெண்டிங்கில் சென்றது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் மேலும் பேசிய வடிவேல். நடிகர் கமல் பற்றிய கேள்விக்கு அவரை புகழும் விதமாக பதிலளித்துள்ளார்.

எங்க அண்ணன் கமலஹாசன் தன்னையே வருத்திக்கிட்டவர் எங்களுக்குத்தான் அவர் பட்ட கஷ்டம் தெரியும். அவர் ரொம்ப நல்ல மனுஷன் அவர் அரசியல்ல ஜெயிக்கிறாரு வராரு வராம போறாரு அத பத்தி பிரச்சினையில்ல அவர் வேதனைகளை தாங்க கூடிய மஹா மஹா மனிதர் என வடிவேல் கமலை புகழ்ந்துள்ளார்.