இளையராஜா பிறந்த நாள் கமல் இதயப்பூர்வ வாழ்த்து

இசைஞானி இளையராஜாவுக்கும் இடையேயான நட்பின் ஆழம் அவ்வளவு நெருக்கமானது. இளையராஜா இசையமைத்த அந்தக்கால கமல் பாடல்கள் மற்றும் பின்னணி இசை அவ்வளவு உணர்வுப்பூர்வமானது ஆகும்.

கமலின் தேவர் மகன், சிங்கார வேலன், அபூர்வ சகோதரர்கள், விக்ரம்,சிப்பிக்குள் முத்து, சலங்கை ஒலி, என கமலஹாசனுக்கு மியூசிக்கல் ஹிட் கொடுத்தவர் இளையராஜா.

ஆரம்ப காலங்களில் இருந்தே, கமலை பாட வைத்து அழகு பார்த்தவர் இளையராஜா அவள் அப்படித்தான் படத்தில் இடம்பெற்ற பன்னீர் புஷ்பங்களே, ராஜபார்வை படத்தின் விழியோரத்து , விக்ரம் படத்தின் டைட்டில் பாடலான விக்ரம் விக்ரம், பேர் சொல்லும் பிள்ளையின் அம்மம்மா வந்ததிங்கு சிங்ககுட்டி, குணா படத்தின் புகழ்பெற்ற பாடலான அபிராமியே தாலாட்டும் சாமியே, விருமாண்டியில் இடம்பெற்ற உன்ன விட என பல்வேறு விதமான சூப்பர் ஹிட் பாடல்களை பாடவைத்தவர் இளையராஜா.

அவர் படங்களுக்கு மட்டுமல்லாமால் சமீபத்தில் வந்த முத்துராமலிங்கம் என்ற படத்துக்கு கூட கமலை பின்னணி பாட வைத்தார் இளையராஜா. ஆரம்ப காலங்களில் பொன்மானே தேடுதே என்ற பாடலை மோகன் நடித்த ஓ மானே மானே படத்திற்காக மோகனுக்காக பாட வைத்திருப்பார் இளையராஜா.

அந்தக்காலத்தில் இளையராஜாவுடன் சேர்ந்து படம் செய்த பல இயக்குனர்கள், நடிகர்கள் ட்ரெண்ட் என்று காலத்திற்கேற்றவாறு இசையமைப்பாளர்களை மாற்றி கொண்டு செல்ல. இன்று வரை இளையராஜாவுடன் இணைந்து படம் செய்பவர் கமல் மட்டுமே,

வரும் ஜூன் இரண்டாம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் இளையராஜாவுக்கு கமல் தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.