கமலை மறைமுகமாக சாடிய தயாரிப்பாளர்

தமிழில் அட்டக்கத்தி,பீட்சா, சூது கவ்வும் ,பீட்சா 2, தெகிடி, முண்டாசுப்பட்டி, சரபம், எனக்குள் ஒருவன் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளவர் சிவி குமார்.இவர் மதுரை மாவட்டம் திருமங்கலத்தை சேர்ந்தவர் இவர். சி. விஜயகுமார் என்ற பெயரை சிவி குமாராக சுருக்கி பல வெற்றிப்படங்களை தயாரித்து சினிமா உலகில் வலம் வருகிறார் இவர்.

சமீபத்தில் கமல் அரவக்குறிச்சியில் முதல் தீவிரவாதி ஹிந்து என்று பேசியதற்கு போராட்டங்கள் ஓய்ந்த பாடில்லை. ஹிந்து இயக்கங்கள் ஆங்காங்கே கொடும்பாவி எரிப்பு, கமல் மீது செருப்பு வீச்சு என நடத்தி வருகிறது.

இந்நிலையில் இது குறித்து மறைமுகமாக பதிவிட்ட சிவி குமார் அறிவாளி போல் காட்டிக்கொண்டாலும் அவரும் அரசியல்வாதிதானே, ஓட்டுனா அப்படித்தான் விட்டுட்டு வேற வேலைய பாருங்கப்பா என அவர் கூறியுள்ளார்.