கமல்தான் எல்லாமே- கிரேஸி மோகன்

கமலஹாசனின் பெரும்பாலான காமெடி படங்கள் ஒரு சில சீரியஸ் படங்கள் உள்ளிட்டவைக்கு காமெடி வசனங்கள் எழுதியவர் கிரேஸி மோகன். கிரேஸி மோகனின் வசனங்கள் தான் கமலின் காமெடி படங்களுக்கு பெரும் பலம் சேர்த்தது.

அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன்,தெனாலி, வசூல்ராஜா எம்பிபிஎஸ்,பம்மல் கே சம்பந்தம் என கமல் கிரேஸி மோகன் கூட்டணி கொடி கட்டி பறந்தது. கமல் சொல்வார் நான் பாதி நாகேஷ் பாதி சிவாஜி என்று அவரும் சென்ஸ் ஆஃப் ஹ்யூமர் உள்ளவர்.

ஒரு வெற்றிகரமான ஆணுக்கு பின்னாடி ஒரு பெண் இருப்பான்னு சொல்ற மாதிரி, என்னோட வெற்றிக்கு காரணம் என் மனைவியோ காதலியோ அல்ல, ஒரு பெண் வேடமிட்ட ஒரு ஆண் “அவ்வை சண்முகி” கமல் , அவர்கிட்ட இருந்து தான் நான் எல்லாம் கத்துகிட்டேன், என்னோட வெற்றிக்கு அவர் தான் காரணம் என கிரேஸி மோகன் கூறியுள்ளார்.