Connect with us

ஓவியாவின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக்: டிரண்ட்டாக்கிய ஆர்மியினர்

பொழுதுபோக்கு

ஓவியாவின் அடுத்த பட ஃபர்ஸ்ட்லுக்: டிரண்ட்டாக்கிய ஆர்மியினர்

பிக்பாஸ் புகழ் ஓவியா நடித்து வரும் ‘களவாணி 2’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில நிமிடங்களுக்கு முன் வெளியாகியுள்ளது.

நடிகர் மாதவன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள ‘களவாணி 2’ படத்தின் போஸ்டரில் ஓவியா அட்டகாசமாக நின்றிருக்க படத்தின் நாயகன் கதவை திறந்து ஓவியாவை பார்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை ஓவியாவின் ரசிகர்கள், ஓவியாவின் ஆர்மியினர் சமூக வலைத்தளத்தில் மிக வேகமாக ஷேர் செய்து வருகின்றனர். இதனால் ஒருசில நிமிடங்களில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் டுவிட்டர் டிரெண்டுக்கு வந்துள்ளது.

களவாணி படத்தை இயக்கிய சற்குணம் தான் இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்கி வருகிறார். இந்த படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது.

Continue Reading
To Top