கலைஞருக்கு ஏற்பட்ட நிலை குறித்து விசாரணை நடத்தப்படும் – எடப்பாடி தடாலடி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிர்வாக ரீதியாகவும் அதிமுக இயக்கத்தையும் கட்டுக்கோப்பாக நடத்தியவர். அவரின் தோழி யானவர் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கில் இருவருக்கும் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் , முதல்வர் ஜெ கடந்த இரண்டு வருடம் முன் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

அப்பல்லோவில் நீண்ட நாட்கள் இருந்து மறைந்த ஜெ மரணத்தில் மர்மம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

அனைத்து தலைவர்களும் சென்று அவரை நேரில் பார்க்க முடியாத நிலையில் கடந்த 2016ம் ஆண்டு மரணமடைந்த ஜெ மரணமடைந்தது மர்மமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தியதால், முதல்வர் பழனிச்சாமி ஓய்வு நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனை விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இருப்பினும் தொடர்ந்து மேடைக்கு மேடை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மர்மத்தை கண்டுபிடிப்போம் என்றும் கோடநாடு உள்ளிட்ட பல சர்ச்சைக்குரிய விஷயங்களில் முதல்வர் பழனிச்சாமி பெயரையும் பயன்படுத்தி வருகிறார்.

இதற்கு மாற்றாக முதல்வர் பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். கலைஞரை வீட்டுக்காவலில் வைத்திருந்தனர் என்றும், நினைத்திருந்தால் வெளிநாடு அழைத்து சென்று காப்பாற்றி இருக்கலாம்.

கலைஞருக்கு ஏற்பட்ட நிலை குறித்து விசாரணை நடத்தப்படும் என முதல்வர் எடப்பாடி கூறியுள்ளார்.