சூதாட்ட கிளப்களில் கோடிகளை அள்ளும் நடிகைகள்

சினிமாவில் பிரபலமாகி விட்டாலே நகைக்கடை திறப்பு விழா, விளம்பரங்களில் நடிப்பது, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என முன்னணி நடிகைகள் ஆர்வம் காட்டுவர். இவர்கள் யாரும் பொது நிகழ்ச்சிகளில் சும்மா பங்கேற்பதில்லை. சில மணி நேரங்கள் அல்லது சில மணித்துளிகள் வருவதற்கு பல லட்சம் பேரம் பேசி வாங்கி வருகின்றனர்.

பிறந்தால் நடிகர் நடிகையாகத்தான் பிறக்க வேண்டும் என்று பலரும் இதனால் நினைக்கின்றனர்.

ஹிந்தி நடிகைகள் இது போல் விளம்பரங்களிலும், திருமண நிகழ்ச்சிகளிலும் நடனம் ஆடுவது முதல் கடை திறப்பு விழாக்கள் மூலமெல்லாம் சம்பாதித்தாலும், தற்போது சில நடிகைகள் சூதாட்ட கிளப்களிலும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர்.

இலங்கையில் பிரபலமான கேசினோ (சூதாட்ட கிளப்) உள்ளது. இந்த கிளப்பிற்கு வந்து கஸ்டமர்களுடன் கலந்துரையாடுவதற்கு பாலிவுட் நடிகை களுக்கு கோடிகளில் கொட்டித் தரப்படுகிறது. சமீபத்தில் இந்த சூதாட்ட வருமானத்தை பார்த்திருக்கிறார் காஜல் அகர்வால். காஜலை அழைத்த சென்ற கிளப் நிர்வாகிகள் பெரும் தொகை கொடுத்ததுடன் தங்களது கஸ்டமர்களுடன் அவரை கலந்துரையாட வைத்து மகிழ்ந்தனர்.