கைப்பிடி மாவு ஏழு ஜென்ம பாத்தினை தீர்க்குமா?!


31eb40a768fd472a076fa49cf71f0843

ஒருவர் ஏழு தலைமுறைக்கு முன் செய்த பாவங்களும், இந்த தலைமுறையில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் பிரச்சனைகள் தீரவேண்டுமென்றால் சனிக்கிழமையன்று பச்சரிசியை ஒரு கையில் அள்ளி கழுவி, நன்கு பொடி செய்து சூரியநமஸ்காரம் செய்துவிட்டு, விநாயகப்பெருமானை மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த அரிசியை விநாயகரைச் சுற்றிப் போட்டால், அந்த அரிசிமாவினை எறும்பு தூக்கிச் செல்லும். அப்படித்தூக்கிச் சென்றாலே நமது பாவங்களில் பெரும்பாலானவை நம்மைவிட்டுப் போய்விடும். அப்படித் தூக்கிச் சென்ற பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும்.

7d12eff384df52c78963bf41fe9ebf9c

எறும்பின் எச்சில் அரிசிமாவின் மீது பட்டதும் அரிசி கெட்டுப்போகாத தன்மையடையும். இந்த பச்சரிசிமாவை முழுமையாக சாப்பிட்டு முடிக்க இரண்டரை வருடங்கள் எடுத்துக்கொள்ளும். இப்படி இரண்டேகால் வருடங்கள் வரை எறும்புக்கூட்டில் இருப்பதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் கவனித்துக் கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டிற்கு ஒருமுறை கிரகநிலை மாறும். அப்படி மாறியதும், அதன் வலு இழந்துபோய்விடும். இதனால், நாம் அடிக்கடி பச்சரிசி மாவினை எறும்புக்கு உணவாகப்போடவேண்டும். ஓர் எறும்பு சாப்பிட்டால் 108 பிராமணர்கள் சாப்பிட்டதற்குச் சமம். இதனால், சனிபகவானின் தொல்லைகள் கூட நம்மைத் தாக்காது . ஒரு கைப்பிடி மாவு நமது ஏழு ஜென்ம பாவங்களை போக்குமென்றல் இப்படி செய்து நமது பிரச்சனைகள் தீர்ந்து நமோடு வாழ்வோம்!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews