கடகம் ராசி விளம்பி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2018!

Kadagam vilambi Tamil puthandu rasi palan

கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த தமிழ்ப் புத்தாண்டு ஏற்றமும் மாற்றமும் தரும் ஆண்டாக இருக்கப் போகிறது. ஜென்ம ராசியில் ராகு பகவான்,ஆறாமிடத்தில் சனி பகவான்,நான்காம் இடத்தில் குரு பகவான், ஏழாமிடத்தில் கேது பகவான் என்ற கிரக அமைப்பு இருக்கின்றது. மேலும் குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி அடுத்துதடுத்து நடைபெற இருக்கின்றது. இந்த விளம்பி வருடத்தில் கடக ராசியினர்கள் திட்டமிட்டு காரியங்கள் செய்ய வேண்டும். சில குணங்களை மாற்றி கொள்வது நன்மை உண்டாக்கும். சோம்பலை தவிர்த்திடுங்கள். சுறுசுறுப்புடன் செயல் புரிந்தால் தான் நினைத்தபடி காரியங்கள் நடைபெறும். எதுவும் தட்டி கழிக்காதீர்கள். அன்றாட பணிகளை அன்றே செய்து விடுங்கள்.

அலுவலகத்தில் உங்கள்  திறமைக்கேற்ப பாராட்டு, பதவி கிடைக்கும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த பதவி உயர்வு கிட்டும். மேலிடத்தில் உங்களுக்கு ஆதரவும், ஆதாயமும் அதிகரிக்கும். உங்கள் திறமை பளிச்சிடும் நேரமாக இந்த வருடம் இருக்கப் போகிறது. அமைதியாக இருக்காமல் ஏதேனும் சுறுசுறுப்பாக புதுமையாக செய்து கொண்டு இருந்தால் உங்களுக்கு அதன் மூலம் நன்மை விளையும். திடீர் பாராட்டு, பெருமைகள் எல்லாம் கிடைக்கும் என்பதால் அது தலைக்கு ஏறாமல் பார்த்து கொள்ளுங்கள்.

பலகாலமாக தடைபட்டு கொண்டு இருந்த இடமாற்றம், பணிமாற்றம் உண்டாகும். ஒரு சிலருக்கு வெளியூர் பயணம், வெளிநாட்டில் வேலை அமையக்கூடும். தொழில், வியாபாரம் சீராக இருக்கும். எதிர்பார்த்துக் கொண்டு இருந்த வங்கி கடன், அரசு அனுமதி கிட்டும். அரசு சம்பந்த வேலையில் இருப்பவர்களுக்கு இந்த விளம்பி வருடம்  எதிர்பாராத பாராட்டு, பதவி கிடைக்கும்.

குடும்பத்தில் இனிமையான சூழல் உருவாகும். இதுவரை தேவையில்லாத குழப்பமான சூழல் இருந்து வந்ததே, இனி அது எல்லாம் மறையும். வாழ்க்கை துணையிடம் சுணக்கம் நீங்கி இணக்கம் உண்டாகும். தீர யோசித்து பிறகு பேசுங்கள். முன்கோபத்தை தவிர்த்திடுங்கள். கடக ராசியினருக்கு தடைகள் அகலும் ஆண்டாக இந்த விளம்பி வருடம் இருக்கப் போகிறது. கல்வி, திருமணம், வேலை போன்றவற்றில் இருந்த தடைகள் அகலும். வரவுக்கு ஏற்றார் போல் செலவுகளும் அதிகரிக்கும்.

வீண் ஆடம்பரங்களை தவிர்த்து விடுங்கள். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அதனை சுபச் செலவாக மாற்றிக்கொள்ளுங்கள். வீடு, மனை,வாகனம் மற்றும் வீட்டிற்கு தேவையானப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். வேண்டாத கேளிக்கைகளைத் தவிர்த்து விடுங்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் கருத்துகளைக் கேட்டு கொண்டு அதன் படி நடப்பார்கள்.

கடகம் ராசி பெண்களுக்கு அதிர்ஷ்டமான ஆண்டாக இருக்கப் போகிறது. எதிர்காலத்தை பற்றி யோசித்து அதற்கான திட்டங்கள் தீட்டி அமைத்து கொள்வது புத்திசாலி தனமாகும். பணிபுரியும் இடத்தில் பணியை சிறப்பாக செய்து பாராட்டு பெறுவீர்கள். மூத்த உறவுகளிடம் இருந்த மனக்கசப்பு நீங்கும். தங்கம், ஆபரணம், ஆடை சேர்க்கை உண்டாகும். மேலும் நன்மைகள் நடைபெற விடுபட்ட  பிரார்த்தனைகள், குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். அஜீரணம், அலர்ஜி, தொண்டை, வயிறு சம்பந்தமான உபாதைகள் வரக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள். உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள்.

கடக ராசி மாணவ மாணவிகள் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள். கிரகங்கள் மற்றும் நேரம் நன்றாக இருப்பதால் சிறிது முயற்சி செய்தாலும் பெரிய அளவில் முன்னேற்றம் காணலாம். சோம்பலை விரட்டி எதிர்காலத்திற்கு பயன்படும் விதமாக பகுதி நேரத்தை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

பரிகாரம்:

மாதம் ஒரு முறை அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வணங்குங்கள். உங்கள் வாழ்கையை மலர்ச்சி அடைய வைப்பார்.