Connect with us

கடகம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

ராசி பலன்

கடகம் ராசி ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் 2019!

திருக்கணிதம் முறைப்படி ராகு-கேது பெயர்ச்சி  மார்ச் 6-ம் தேதி நடைபெறுகின்றது. உங்கள் ராசியில் அமர்ந்து இருந்த ராகு பகவான் பெயர்ச்சியாகி 12-ம் இடத்திற்கு வர போகின்றார். கேது பகவான் ஏழாம் இடத்தில் இருந்து ஆறாம் இடத்திற்கு வர போகின்றார். இனி ராகு-கேது பெயர்ச்சி கடகம் ராசியினருக்கு என்ன பலன்களை தர போகின்றது என்பதை விரிவாக காணலாம்

Kadagan ragu kethu peyarchi 2019

பொதுவான பலன்கள்:

இதுவரை இருளில் இருந்த நீங்கள், பல நேரங்களில் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு மனப்போராட்டங்களை சந்தித்து வந்தீர்களே, இனி உங்களுக்கு தெளிவான பாதை புலப்படும். உங்களை சுற்றிருப்பவர்கள் யார் நல்லவர் என்பதை அறிந்து கொள்வீர்கள். உங்கள் எதிரிகளை இனம் கண்டு விலகிவிடுவீர்கள். இதுவரை மனதில் தோன்றிய இனம் புரியாத பயம், அச்சம் விலகி தெளிவான முடிவினை எடுப்பீர்கள். ராகு பகவான் 12-ம் இடத்தில்  இருக்கின்ற பொழுது விரயங்களும், தூரதேச பயணங்களும் தருவார்.

கேது சனியோடு இணைந்து ஆறாம் இடத்தில் இருப்பதால் தொழிலில், வியாபாரத்தில் அபார வளர்ச்சி ஏற்படக்கூடும். பொதுவாக பாவ கிரகங்கள் 3,6,11 இடங்களில் வருகின்ற பொழுது நற்பலன்களை கொடுப்பார். எதிரிகள் உங்களிடம் சரணடையும் நிலை உருவாகும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள்  மீண்டும் இணைவார்கள்.

ராகு பகவான் 12-ம் இடத்தில் இருப்பதால் பண விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். விரயங்களை சுப விரயங்களாக மாற்றி கொள்ளுங்கள். வீடு கட்டுவது, மனை வாங்குவது, விலையுர்ந்த பொருட்களை வாங்கும் யோகம் இருக்கின்றது. திருமணம் ஆகாத கடகம் ராசியினருக்கு நல்ல வரன் அமையக்கூடும். இங்கே குறிப்படுவது பொதுவான ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் மட்டுமே, சுயஜாதகத்தில் மற்ற கிரக அமைப்பு, பலம், பார்வை, சேர்க்கை வைத்து பலன்கள் மாறுபடக்கூடும்.

உத்தியோகிஸ்தர்களுக்கு:

தனியார் துறையில் பணிபுரிகின்றவர்கள் நல்ல வளர்ச்சி அடைவீர்கள். இதுவரை சரியான வேலை அமையாமல் இருந்தவர்கள், முயற்சி செய்தால் நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடும். பணியிடத்தில் அதிகம் உழைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சிலருக்கு மற்றவர்களின் வேலையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் உருவாகும். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போகாது. குருவின் அதிசார காலத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

வியாபாரம்/தொழில் பிரிவினர்கள்:

வியாபாரம், சொந்தமாக தொழில் செய்கின்றவர்கள் நல்ல முன்னேற்றம் அடைவார்கள். வியாபாரம் விரிவாக்கம் செய்வதற்கு ஏற்ற காலமாக இருக்கின்றது. ஆன்மீகம், பூஜை, உணவு சம்மந்தப்பட்ட பொருட்களை வியாபாரம் செய்கின்றவர்களுக்கு நல்ல லாபம் வரக்கூடும். வேலை விஷயமாக அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் உருவாகும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். நீண்ட காலமாக சரியான வேலை அமையாமல் இருப்பர்வர்கள் குறைந்த முதலீட்டில் ஏதேனும் வியாபாரத்தை தொடங்கலாம்.

மாணவ – மாணவியர்கள்:

மாணவ – மாணவிகள் படிப்பில் அதிகம் சிரத்தை எடுத்து படிக்க வேண்டும். படிப்பில் கவனம் சிதறும். நவீன சாதனங்களின் மீது அதிகம் ஈடுபடுவார்கள் என்பதால் பெற்றோர்கள் பிள்ளைகளை தங்கள் மேற்பார்வையில் வைத்து கொள்வது நல்லது. பகுதி நேரங்களை வீணாக்காமல் எதிர்காலம் நலன் கருதி ஏதேனும் ஒரு பயனுள்ள கோர்ஸில் படித்து வைத்துக் கொள்ளுங்கள். குரு பகவான் அதிசார காலங்களில் வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

குடும்பம்:

இல்லத்தில் உங்களது செல்வாக்கு உயரும். உங்களை நம்பி முக்கியமான பொறுப்புகளை கொடுப்பர். உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். இல்லத்தில் இருப்பவர்களுடன் புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். சொந்த பந்தங்கள் வருகையால் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகத்துடன் வளம் வருவீர்கள். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு மழலை செல்வம் கிட்டும்.

உடல்நலம்:

அவ்வப்பொழுது உடல் உபாதைகள் ஏற்படக்கூடும் என்பதால் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

வணங்க வேண்டிய தெய்வம்:

மாதந்தோறும் வருகின்ற அஷ்டமி தினத்தன்று அல்லது செவ்வாய்க்கிழமையன்று கால பைரவரை வணங்கி வாருங்கள். மேலும் சுபகாரியத் தடைகள் விலக, நவகிரகங்களில் இருக்கின்ற குருவை வியாழக்கிழமை அன்று தரிசித்து வாருங்கள்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top