ஆர்.ஜே பாலாஜியின் எல்.கே.ஜிக்கு கபில்தேவ் வாழ்த்து

ஆர்.ஜே பாலாஜி நடித்து வரும் படம் எல்.கே.ஜி. அரசியல் விசயங்களை நகைச்சுவையாக நையாண்டியாக சொல்லியுள்ள படம் இது.

‘அரசியல் படமான இதில், ஹீரோவாக நடிக்கிறார் பாலாஜி. அவருக்கு ஜோடியாக பிரியா ஆனந்த் நடிக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி கதை, திரைக்கதை எழுதியிருக்கும் இந்தப் படத்தை பிரபு இயக்குகிறார்.

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். விது அய்யண்ணா ஒளிப்பதிவு செய்ய, அந்தோணி எடிட் செய்கிறார். லியோன் ஜேம்ஸ் இசையமைக்கும் இந்தப் படத்தின் இசை உரிமையை, திங்க் மியூஸிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

பிப்ரவரி 22 ல் இப்படம் வெளிவர உள்ளது

இந்நிலையில் இந்த படம் வெற்றியடைய பலரும் வாழ்த்தி கொண்டிருக்க பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவும் வாழ்த்தியுள்ளார்.

ஆர்.ஜே பாலாஜி கிரிக்கெட்டில் ஆர்வமுள்ளவர். அதனால் பிரபல தொலைக்காட்சியில் ஐபிஎல் மேட்சை தமிழில் ரன்னிங் கமென்ட்ரி செய்தார்.

இதனால் கிரிக்கெட் சார்ந்த நபர்களிடமும் ஆர்.ஜே பாலாஜிக்கு அறிமுகம் உள்ளது குறிப்பிடத்தக்கது