மாங்கல்ய பலம் தரும் காமாட்சி அம்மனை வழிபட சில மந்திரங்கள்..

c79bc1b49e249f2d95fb3e0d2f80dbac-1

இன்றைய தினம் காரடையான் நோன்பு எனப்படும் காமாட்சி நோன்பாகும். சிவனை கண்ணை விளையாட்டாய் பார்வதி மூட அகில உலகமும் இருளில் மூழ்க, பார்வதிதேவியை பாவம் பீடித்தது. அதனால் சிவனை பிரிய வேண்டிய நிலைக்கு ஆளானாள். பாவ விமோசனமாய் காஞ்சிபுரத்தில் காமாட்சியாய் தங்கி இருந்து தவம் செய்து மீண்டும் சிவனை அடைந்தாள். திருமணம் வரம் வேண்டுவோர், கணவனை பிரிந்தவர், மாங்கல்ய பலம் வேண்டுவோர் காமாட்சி அம்மனை மனதார் நினைத்து வணங்கி வந்தால் தங்கள் துயர் தீரும் என்பது நம்பிக்கை.

1e3b86b67c585e54df9a0438148f0289

காமாட்சி அம்மனுக்குரிய மந்திரங்கள்…

காமாட்சி அம்மன் மூலமத்திரம்….

ஹ்ரீங்கார ப்ரணவாத்மிகாம் ப்ரணமதாம் ஸ்ரீ வித்யவித்யாமயீம்

ஐம் க்லீம் ஸௌம் ருசி மந்த்ர மூர்த்தி நிவஹா காரா மசே’ஷாத்மிகாம்

ப்ரஹ்மானந்த ரஸானுபூத மஹிதாம் ப்ரஹ்மப்ரியம் வாதினீம்

காமாக்ஷீம் கலயாமி கல்பலதிகாம் காஞ்சிபுரீ தேவதாம்

ஸ்ரீ காமாக்ஷீ துக்க நிவாரண அஷ்டகம்

மங்களரூபிணி மதி அணி சூ’லினி மன்மத பாணியளே

சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் ச’ங்கரி ஸௌந்தரியே

கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே

ஜய ஜய ச’ங்கரி கௌரி க்ருபாகரி து:க்க நிவாரணி காமாக்ஷி           1

கான் உறுமலர் எனக்கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்

தான் உறு தவஒளி தார்ஒளி மதிஒளி தாங்கியே வீசிடுவாள்

மான் உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்

ஜய ஜய ச’ங்கரி கௌரி க்ருபாகரி து:க்க நிவாரணி காமாக்ஷி           2

ச’ங்கரி ஸௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே

பொங்கு அரிமாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே

எம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல்துர்க்கையளே

ஜய ஜய ச’ங்கரி கௌரி க்ருபாகரி து:க்க நிவாரணி காமாக்ஷி           3

தண தண தந்தண தவில் ஓலி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்

கண கண கங்கண கதிர் ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்

பண பண பம்பண பறை ஒலி கூவிடப் பண்மணி நீ வருவாய்

ஜய ஜய ச’ங்கரி கௌரி க்ருபாகரி து:க்க நிவாரணி காமாக்ஷி           4

பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே

கொஞ்சிடும் குமரனைக் குணம்மிகு வேழனைக் கொடுத்த நல்குமரியளே

சங்கடம் தீர்த்திடச் சமர் அது நல்சக்தி எனும் மாயே

ஜய ஜய ச’ங்கரி கௌரி க்ருபாகரி து:க்க நிவாரணி காமாக்ஷி           5

எண்ணியபடி நீ அருளிட வருவாய் எம்குல தேவியளே

பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்

கண்ணொளி அதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே

ஜய ஜய ச’ங்கரி கௌரி க்ருபாகரி து:க்க நிவாரணி காமாக்ஷி           6

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை என்றுநீ சொல்லிடுவாய்

சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்

படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்

ஜய ஜய ச’ங்கரி கௌரி க்ருபாகரி து:க்க நிவாரணி காமாக்ஷி           7

ஜய ஜய பாலா சாமுண்டேச்’வரி ஜய ஜய ஸ்ரீதேவி

ஜய ஜய துர்க்கா ஸ்ரீ பரமேச்’வரி ஜய ஜய ஸ்ரீதேவி

ஜய ஜய ஜயந்தி மங்களகாளி ஜய ஜய ஸ்ரீதேவி

ஜய ஜய ச’ங்கரி கௌரி க்ருபாகரி து:க்க நிவாரணி காமாக்ஷி           8

ஓம் சக்தி தேவியே துணை…

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews