ஜூலை 23 மோடியின் தமிழக வருகை இதற்காகவா?!

வைணவ திருத்தலங்களான 108 திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலின் அனந்த சரஸ் என்ற திருக்குளத்தில் வீற்றிருக்கும் 40 ஆண்டுகளுக்குப் பின்னா் அத்திவரதர் நீரிலிருந்து வெளியில் வந்து அருள் பாலித்து வருகிறாா். 48 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நாள்தோளும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா்.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர். விடுமுறை தினமான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அதிகமா இருந்தது. இதுவரை மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், அவருடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திருமதி துர்கா ஸ்டாலின், நடிகர் பார்த்தீபன் என பல்வேறு பிரபலங்களும் வழிபாடு நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 23ம் தேதி காஞ்சிபுரம் வரவுள்ளாா். ஜூலை 23ம் தேதி சயனக் கோலத்தில் இருக்கும் அத்திவரதரை தரிசித்து, மறுநாள் (ஜூலை 24) நின்ற கோலத்தில் எழுந்தருளும் அத்திவரதரை தரிசிக்க உள்ளாா். 

பிரதமர் நரேந்திர மோடியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மோடியுடன் இணைந்து முதல்வர் பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் சாமி தரிசனம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 7 நாட்களில் ஏழு லட்சத்து 65 ஆயிரம் பேர் அத்திவரதரை தரிசித்துள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.