Connect with us

மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்: மின்வாரியத்தின் இன்ப அதிர்ச்சி அறிவிப்பு

செய்திகள்

மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம்: மின்வாரியத்தின் இன்ப அதிர்ச்சி அறிவிப்பு

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கின்ற காரணத்தினால் நேற்று முதல் ஜூன் 30 வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மட்டும் மின் கட்டணம் செலுத்த கூடுதல் அவகாசம் அளிக்கப்படும் என்றும் மற்ற மாவட்டங்களில் ஜூன் 15-க்குள் மின் கட்டணத்தை கட்ட வேண்டுமென்றும் மின்சார வாரியம் ஏற்கனவே அறிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்கள் தவிர குறிப்பிட்ட காலத்திற்குள் மின் கட்டணம் செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது

இந்த நிலையில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மின் கட்டணம் கட்ட அவகாசம் எத்தனை நாள் என்பது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி ஜூலை 15ஆம் தேதி வரை சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அபராதம் இன்றி கட்டணத்தை செலுத்தலாம் என மின் வாரியம் அறிவித்துள்ளது

மேலும் நேரில் வந்து கட்ட முடியாதவர்கள் இணையதளத்தின் வாயிலாக மின் கட்டணத்தை செலுத்தலாம் என்றும் மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது. இன்னும் ஒரு மாத காலம் வரை மின் கட்டணம் செலுத்த சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட மக்களுக்கு அவகாசம் இருப்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

Continue Reading
To Top