Connect with us

எதிரி நாட்டின் நிலைப்பாட்டை உறுதிசெய்த பலவீனமான பிரதமர் மோடிதான்: ஜோதிமணி எம்பி கண்டனம்

செய்திகள்

எதிரி நாட்டின் நிலைப்பாட்டை உறுதிசெய்த பலவீனமான பிரதமர் மோடிதான்: ஜோதிமணி எம்பி கண்டனம்

சமீபத்தில் லடாக் எல்லையான கால்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட இந்திய சீன ராணுவ வீரர்களுக்கு இடையிலான மோதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பிலும் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது

இந்த நிலையில் சீனா அத்துமீறி உள்ளே நுழைந்து இந்திய வீரர்களை தாக்கியும் கொலை செய்தும் இந்திய பிரதமர் மௌனமாக இருக்கிறார் என்றும் இந்திய ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்திற்கு பதிலடி கொடுக்காத பிரதமராக மோடி இருக்கிறார் என்றும் காங்கிரஸ் கட்சி கடந்த சில நாட்களாக கடுமையான கண்டனம் தெரிவித்து வருகிறது

குறிப்பாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துகளை தெரிவித்து வருகிறார். அதேபோல் முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்பியுமான ப. சிதம்பரம் அவர்களும் மோடி அவர்களுக்கு தனது டுவிட்டரில் 10 கேள்விகளை எழுப்பி உள்ளார். இதற்கு பிரதமர் மோடி இன்னும் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மற்றொரு எம்பியான ஜோதிமணி அவர்கள் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: இந்திய சுதந்திர வரலாற்றில் போர்முனையில் எதிரி நாட்டின் நிலைப்பாட்டை உறுதிசெய்த ஒரே பலவீனமான பிரதமர் நரேந்திர மோடிதான். வலிமை,தியாகம் மிகுந்த இந்திய இராணுவத்திற்கு இதைவிடவும் பின்னடைவாக எதுவும் இருக்கமுடியாது

Continue Reading
To Top