அருண் விஜய்க்கு பயிற்சி கொடுக்கும் ஏழாம் அறிவு டாங்லீ

டாங்லீ என்ற ஒற்றை கதாபாத்திரம் மூலம் அனைவரையும் சீட்டோடு கட்டிப்போட்டவர் ஜானி. ஏழாம் அறிவு திரைப்படத்தில் நோக்கு வர்மத்தை பயன்படுத்தி பலரை கொல்லும் கொடூர கேரக்டர் இவரது கேரக்டர். இதற்கு முன் இப்படிப்பட்ட கதாபாத்திரம் தமிழ்ப்படங்களில் வந்ததில்லை டாங்லீ என்ற கேரக்டரில் நடித்து அசத்தி இருந்தார்.

இவர் இப்போது பாக்சர் படத்துக்காக அருண் விஜய்க்கு பாக்ஸிங் சொல்லி கொடுத்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கிய தடம் வெற்றிக்கு பின் பாக்ஸர் படத்தில் நடிக்கிறார் அருண் விஜய்.

இதற்காக பாக்ஸரான ஜானியிடம் வியட்நாம் சென்று ஸ்பெஷல் பயிற்சி எடுத்து வருகிறாராம் அருண் விஜய்.