டீலாலி கன்டோன்மென்ட் போர்டில் வேலை

மத்திய அரசின் டீலாலி கன்டோன்மென்ட் போர்டில் Deolali Cantonment Board காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டீலாலி கன்டோன்மென்ட் போர்டில் வேலை

காலிப் பணியிடங்கள்:

மழலையர் ஆசிரியர் (Montessori Teacher) பிரிவில் 08 பணியிடங்களும், கணினி பயிற்றுவிப்பாளர் (Computer Instructor) பிரிவில் 04 பணியிடங்களும், வரைதல் ஆசிரியர் (Drawing Teacher) பிரிவில் 01 பணியிடங்களும், உதவி ஆசிரியர் (Assistant Teacher)  பிரிவில் 13 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

மழலையர் ஆசிரியர் (Montessori Teacher)  பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு படித்து முடித்திருக்க வேண்டும்.  கணினி பயிற்றுவிப்பாளர் (Computer Instructor) பணியிடங்களுக்கு M.Sc Information Technology படித்து முடித்திருக்க வேண்டும். உதவி ஆசிரியர் (Assistant Teacher)  பணியிடங்களுக்கு B.E, M.A, B.Sc, M.Sc, D.T.Ed, B.P.Ed படித்து முடித்திருக்க வேண்டும். 

வயது வரம்பு:

40 வயதிற்குள்  இருக்க வேண்டும்.

ஊதியம்:

மழலையர் ஆசிரியர் (Montessori Teacher)  பணியிடங்களுக்கு ரூ. 13,890 வரை, கணினி பயிற்றுவிப்பாளர் (Computer Instructor) பணியிடங்களுக்கு ரூ. 17,182 வரை, வரைதல் ஆசிரியர் (Drawing Teacher) பணியிடங்களுக்கு ரூ. 19,360 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு மற்றும் செயல்விளக்க தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.canttboardrecruit.org என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.canttboardrecruit.org/uploads/Deolali/ADeolali9.pdf என்ற இணையத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.05.2019