சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தில் வேலை

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப பணியாளர்கள் தேவைப்படுகின்றன. மொத்தம் 191 பணியிடங்கள்  உள்ளன.

அதிகளவில் படிக்காமல் இருந்தால் சரியான சம்பளத்தில் குறிப்பிட்ட பகுதிகளில் தகுந்த உடற்கூறுடன் வேலை செய்ய இது தக்க தருணம் ஆகும்.

தகுதியானது பத்தாம் வகுப்பு படித்து இருந்தால் போதும். முன் அனுபவம் தேவையில்லை. வயது வரம்பு 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.18200 – 52900 ஆகும்.

சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தில் வேலை

எழுத்துத் தேர்வு, உடற்கூறு அளத்தல், உடல்தகுதித் தேர்வு, உடற்திறன் போட்டிகள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  விண்ணப்பிப்பதற்கான தேர்வு கட்டணம் ரூ.130 ஆகும்.

இட ஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.

 http:///www.tnusrbonline.org/ என்ற இணையதளத்தில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை 08.3.2019 முதல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க முடிக்க வேண்டிய கடைசி தேதி  08.04.2019.