பொறியாளர்கள் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை

பொறியாளர்கள் இந்தியா லிமிடெட் (EIL) நிறுவனத்தில் காலியாக உள்ள  நிர்வாகி (Executive) மற்றும் குழாய் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொறியாளர்கள் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலை

காலிப் பணியிடங்கள் : 

நிர்வாகி (Executive) பிரிவில் 15 பணியிடங்களும், குழாய் பொறியாளர்  பிரிவில் 15 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

இரண்டு பணியிடங்களுக்கும் B.E Mechanical Engineering மற்றும் B.Tech Mechanical Engineering பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கு 41 வயதிற்குள் இருக்க வேண்டும். குழாய் பொறியாளர் பணியிடங்களுக்கு 37 வயதிற்குள் இருக்க வேண்டும்

ஊதியம்:

நிர்வாகி (Executive) பணியிடங்களுக்கு ரூ.86400 முதல் ரூ.96000 வரை வழங்கப்படும். குழாய் பொறியாளர் பணியிடங்களுக்கு ரூ.72000 முதல் ரூ.80000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் http://recruitment.eil.co.in/  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய http://recruitment.eil.co.in/hrdnew/others/ONLINE%20detailed%20advertisement.pdf  என்ற இணையத்தில் சென்று பார்க்கவும்.

      விண்ணப்பிக்க தொடங்கிய தேதி: 29-03-2019     

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-04-2019