மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் 151 பேருக்கு வேலை

மாநில அரசின் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் (TNPCB) காலியாக உள்ள சுற்றுச்சூழல் விஞ்ஞானி, இளநிலை உதவியாளர் மற்றும் தட்டெழுத்தாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் 151 பேருக்கு வேலை

காலிப் பணியிடங்கள் :

சுற்றுச்சூழல் விஞ்ஞானி (Environmental Scientist) பிரிவில்  60   பணியிடங்களும், இளநிலை உதவியாளர் (Junior Assistant) பிரிவில் 36 பணியிடங்களும், தட்டெழுத்தாளர் (Typist) பிரிவில் 55 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

சுற்றுச்சூழல் விஞ்ஞானி (Environmental Scientist)  பணியிடங்களுக்கு M.Sc Biochemistry, M.Sc Chemistry, M.Sc Environmental Science, M.Sc Zoology ஏதேனும் ஒரு பிரிவில் படித்து இருக்க வேண்டும். இளநிலை உதவியாளர் (Junior Assistant) மற்றும்  தட்டெழுத்தாளர் (Typist) பணியிடங்களுக்கு  ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து முடித்து இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

அனைத்து பணியிடங்களுக்கும் 18 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்:

சுற்றுச்சூழல் விஞ்ஞானி (Environmental Scientist)  பணியிடங்களுக்கு ரூ.37,700 முதல் ரூ.1,19,500  வரை வழங்கப்படும். இளநிலை உதவியாளர் (Junior Assistant) மற்றும் தட்டெழுத்தாளர் (Typist) பணியிடங்களுக்கு ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

ஆன்லைன் தேர்வு, திறன் சோதனை மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ. 500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் அதாவது எஸ்.டி. எஸ்.சி. மற்றும் பி.டபிள்யு.டி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 250 ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைன் மூலமாக www.tnpcb.gov.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம்.  மேலும் முழுமையான விவரங்களை அறிய https://drive.google.com/file/d/13RYShZb7ObdHHb-dqkpxxrz_gfC5G3tx/view என்ற இணையத்தில் சென்று பார்க்கவும்.

       விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி: 23.04.2019