சென்னை பல்கலைகழகத்தில் வேலை

தமிழக அரசின் கீழ் இயங்கும் சென்னை பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை பல்கலைகழகத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

கெஸ்ட் ஆசிரியர் பிரிவில் 92 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

முதுகலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.  பல்கலைக்கழக மானியக்குழுவின் கீழ் நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு  செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு,  நேர்முக தேர்வு  மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு  மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

சென்னை பல்கலைக்கழக இணையத்திற்கு சென்று  கெஸ்ட் ஆசிரியர் பணிக்கான விண்ணப்பத்தை தரவிறக்கம் செய்ய வேண்டும். தேவையான அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

       University of Madras Navalar Nagar,  Chepauk, Triplicane,  Chennai, Tamil Nadu 600005

       விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.06.2019