தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

Community Care Co-ordinator பிரிவில்  14 பணியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கில அறிவு பெற்றிருப்பதுடன் எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு மற்றும் பராமரிப்பு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

மாதம் ரூ.6,000  வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.tnsacs.in  என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து  பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்கள் நகல்களை இணைத்து பக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரியின் முகவரிக்கு அனுப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை  www.tnsacs.in  என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பங்கள் சேர கடைசி தேதி: 26.07.2019