இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலை

மத்திய அரசின் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் (IOCL) காலியாக உள்ள இளநிலை பொறியியல் உதவியாளர் (Junior Engineering Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலை

காலிப் பணியிடங்கள் :

இளநிலை பொறியியல் உதவியாளர் (Junior Engineering Assistant)  பிரிவில் 129     உள்ளன.

கல்வித் தகுதி:

Diploma in Mechanical Engineering,Diploma in Chemical Engineering,Diploma in Instrumentation and Control Engineering,Diploma in Electrical Engineering,B.Sc Chemistry,B.Sc Mathematics,B.Sc Physics,B.Sc Industrial Chemistry ஏதாவதொரு துறையில் படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

ரூ. 11,900  முதல் ரூ.32,000 வரை வழங்கப்படும்.

வயது வரம்பு:

18 முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

எழுத்துத் தேர்வு, திறன் மற்றும் திறமை மற்றும் உடல் பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ. 150 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.iocl.com  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.iocrefrecruit.in/iocrefrecruit/advert_pdf/68.pdf என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 23-07-2019