சென்னை ரயில்வே இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் வேலை

இந்திய ரயில்வேயின் சென்னை இணைப்புப் பெட்டித் தொழிற்சாலையின் மருத்துவமனையில் காலியாக உள்ள பிசியோதெரபிஸ்ட் மற்றும் பார்மசிஸ்ட்களை பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு  தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை ரயில்வே இணைப்புப் பெட்டி தொழிற்சாலையில் வேலை

காலிப் பணியிடங்கள்:

பிசியோதெரபிஸ்ட்  பிரிவில் 01 பணியிடங்களும், பார்மசிஸ்ட் பிரிவில் 03 பணியிடங்களும் உள்ளன.

கல்வித்தகுதி:

சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டப்படிப்பு  படித்து முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

பிசியோதெரபிஸ்ட்  பணியிடங்களுக்கு ரூ.56,300  வரை வழங்கப்படும். பார்மசிஸ்ட் பணியிடங்களுக்கு ரூ.47,900 வரை வழங்கப்படும்.

வயதுவரம்பு:

பிசியோதெரபிஸ்ட்  பணியிடங்களுக்கு 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். பார்மசிஸ்ட் பணியிடங்களுக்கு 20 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.icf.indianrailways.gov.in  என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான அனைத்து சான்றிதழ்  சேர்த்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

      Assistant Personnel Officer/Recruitment, Integral Coach Factory, Chennai 600 038 மேலும் முழுமையான விவரங்கள் அறிய file:///C:/Users/Dotcom/Downloads/1564050413119-pharma.pdf  என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

     விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 19.08.2019