எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் வேலை

அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தின் (எய்ம்ஸ்) பாட்னா கிளையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் வேலை

காலிப் பணியிடங்கள்:

பேராசிரியர் பிரிவில்  46 பணியிடங்களும், கூடுதல் பேராசிரியர் பிரிவில்  38 பணியிடங்களும், உதவி பேராசிரியர்  பிரிவில்  56 பணியிடங்களும்,  இணை பேராசிரியர் பிரிவில் 56 பணியிடங்களும் உள்ளன.

கல்வித் தகுதி:

மருத்துவத் துறையில் முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பேராசிரியர் மற்றும் கூடுதல் பேராசிரியர் பணியிடங்களும் 58 வயதிற்குள் இருக்க வேண்டும். உதவி பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் பணியிடங்களும் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.1500 மற்ற அனைத்து விண்ணப்பத்தாரர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.1200  ஆகும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆன்லைனில் www.aiimspatna.org  என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.aiimspatna.org   என்ற இணையதளத்தில் சென்று அறிந்து கொள்ளலாம்.

      விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.07.2019