ஜப்பான் நாட்டின் இண்டர்நெட் விரதம் குறித்து விவேக் பாராட்டு

உலகம் இணையதள வளர்ச்சியில் அத்துமீறி சென்று வருகிறது. பிறந்த குழந்தைகள் கூட வளர்ந்த சில நாட்களில் செல்போனையே விளையாட வேண்டுமென்று கேட்கின்றனர்.சிறிது நாளில் கம்ப்யூட்டரிலும் எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு விடுகின்றனர். பெரியவர்களுக்கு தெரியாத விஷயங்களை கூட ஈஸியாக தெரிந்து கொண்டு விடுகின்றனர்.

பேஸ்புக், டுவிட்டர், ஸ்முல், டிக் டாக், வாட்ஸப் போன்ற இணையதள பயன்பாடுகள் நம் நேரத்தை அதிகம் சாப்பிடுகின்றன. இதை நாம் பார்க்காமலும் இருக்க முடிவதில்லை. அந்த அளவுக்கு இதற்கு பெரும்பாலோனோர் அடிமை ஆகி விட்டனர்.

நம் நாட்டின் பாரம்பரிய விளையாட்டுக்கள், நிகழ்ச்சிகள் எல்லாம் சிறிது சிறிதாக அழிந்து வருகின்றன.

இந்நிலையில் விவேக் எழுதியுள்ள தனது டுவிட்டில்

கேள்விப்பட்டேன். ஜப்பானில் வாரம் இரு நாட்கள் “ இண்டர் நெட் விரதம் அமுல்படுத்தப் பட்டுள்ளது. அந்த இரு நாட்களில் இளைய சமுதாயம், நெட் பக்கம் போகாமல் பெற்றோர், நண்பர்கள், விளையாட்டு, இயற்கை என்று இருக்க வேண்டுமாம்!

வரவேற்கதக்க விஷயம் என்று விவேக் கூறியுள்ளார்.