ஜனவரி மாத ராசி பலன் 2019!

மேஷம் ராசி ஜனவரி மாதம் ராசி பலன்கள் 2019:

அன்புள்ள மேஷம் ராசியினருக்கு, இந்த ஜனவரி மாதம் விட்டதை பிடிக்கும் மாதமாக இருக்கப் போகின்றது. மாத தொடக்கத்தை விட பிற்பகுதியில் நன்மை நடைபெறக்கூடும். பணியிடத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் உங்களது திறமைகள் வெளிப்படக்கூடும். உங்களது கடின உழைப்பால் மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு புதிய பொறுப்பும், இடமாற்றமும் உண்டாகும். இதுவரை நல்ல வேலை அமையாமல் இருந்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் கூடிய புதிய வேலை அமையக்கூடும்.

பழைய நண்பர்கள், உறவினர்களை வருகையால் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். சூரியன் ஒன்பதாம் இடத்தில் சனியுடன் இணைந்து இருப்பதால் பிள்ளைகளால் சற்று அலைச்சல் உண்டாகும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பிரிந்த தம்பதியர்கள் மீண்டும் இணைவார்கள்.

உங்கள் ராசிநாதன் செவ்வாய் 12-ம் வீட்டில் இருப்பதால் மருத்துவ செலவுகள் அதிகரிக்கக்கூடும். குருவின் பார்வை செவ்வாய் மீது விழுவதால் புகழ் பெற்ற புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். ராசிநாதன் செவ்வாய் 12-ம் வீட்டில் மறைந்து இருப்பதால் எதையும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயலில் ஈடுபடுங்கள். முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். அனாவசிய பேச்சுகளை தவிர்த்திடுங்கள்.

குருவும் சுக்கிரனும் எட்டாம் இடத்தில் இணைந்து இருப்பதால் திடீர் யோகம் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத வகையில் திருப்பங்கள் உண்டாகும். குறிப்பாக ரியல் எஸ்டேட், கமிஷன் மார்க்கெட்டிங், வியாபாரம் செய்கின்றவர்களுக்கு  நல்ல தனலாபம் உண்டாகும். தள்ளி போன திருமணப் பேச்சு வார்த்தைகள் நல்ல படியாக முடிவடையும். விலையுர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அதிக கடன் வாங்கி தொழிலை அல்லது வியாபாரத்தை விரிவாக்கம் செய்வதை தவிர்த்திடுங்கள். உங்கள் 9-ம் வீட்டின் அதிபதி குரு எட்டாம் வீட்டில் மறைந்து இருப்பதால் கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை.

ரிஷபம் ராசி ஜனவரி மாதம் ராசி பலன்கள் 2019:

அன்புள்ள ரிஷபம்  ராசியினருக்கு, இந்த ஜனவரி மாதம் இடையூறுகளை கடந்து வெற்றி பெரும் மாதமாக இருக்கப் போகின்றது. சுக்கிரனும் குருவும் இணைந்து ஏழாம் இடத்தில் இருப்பதால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். சுக்கிரன் ஏழாம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்ப்பதால் வாடிய முகம் மலரும். புதிய உற்சாகத்துடன் செயல்பட தொடங்குவீர்கள். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.

புதிய வேலைக்கு முயற்சி செய்கின்றவர்களுக்கு  நல்ல வேலை அமையக்கூடும். சிலர் வேலை விஷயமாக வெளிநாடு அல்லது வெளிமாநிலத்திற்கு செல்ல வாய்ப்பு வரக்கூடும்.

ராகு மூன்றாம் இடத்தில்  இருப்பதால் வியாபாரத்தில் கணிசமான லாபம் வரக்கூடும். குறிப்பாக உணவு, மருத்துவம், அழகு சாதனங்கள், அன்றாட பொருட்கள், கட்டிட வகைகளால் லாபம் அடைவீர்கள். உங்கள் ராசிக்கு பதினோராம் வீட்டில் செவ்வாய் இருப்பதால் உங்களது நிர்வாகத் திறன் அதிகரிக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். சிலர் திடீரென்று சேமிக்க தொடங்குவீர்கள். சூரியன் 8-ம் வீட்டில் இருப்பதால் பெற்றோர்களின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். அஷ்டமத்தில் சனி பகவான் இருப்பதால் முன்கோபத்தை தவிர்த்திடுங்கள். மூன்றாம் நபர்களால் வீண் பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பேச்சில் கவனம் தேவை.

எட்டாம் இடத்தில் புதன் இருப்பதால் உங்களை விலகி சென்ற சொந்த பந்தங்கள் மீண்டும் இணைவார்கள். அடிப்படை வசதிகள் பெருகும். நெடுநாட்களாக திட்டமிட்ட காரியங்கள் இப்பொழுது கைக்கூடி நடைபெறக்கூடும்.

மாத பிற்பகுதியில் எதிர்பாராத தனவரவு உண்டு. இல்லத்தில் இருப்பவர்கள் உங்களது பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். மொத்தத்தில் இம்மாதம் உங்களது அனுபவ அறிவை பயன்படுத்தி சாதித்து காட்டும் மாதமாக இருக்கப் போகின்றது.

மிதுனம் ராசி ஜனவரி மாதம் ராசி பலன்கள் 2019:

அன்புள்ள மிதுனம் ராசியினருக்கு, இந்த ஜனவரி மாதம் நிதானத்துடனும்,பொறுமையுடனும் செயல்படக் கூடிய மாதமாக இருக்கப் போகின்றது. மாத தொடக்கத்தில் சுக்கிரன் குருவோடு இணைந்து ஆறாம் இடத்தில் அதாவது விருச்சிகம் ராசியில் சஞ்சரிக்கின்றார்கள். பொருளாதாரம் மேம்படும். ஆறாம் இடத்தில்  இருக்கும் குரு உங்களது இரண்டாம் வீட்டை பார்ப்பதால் கனிவான பேச்சால் பல வித காரியங்களை முடித்து காட்டுவீர்கள்.

செவ்வாய் 10-ம் வீட்டில் இருப்பதால் புதிய வேலை தேடி கொண்டு இருந்தவர்களுக்கு நல்ல வேலை அமையக்கூடும். சிலருக்கு அயல்நாட்டில் நல்ல நிறுவனத்தில் வேலை அமையக்கூடும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரக்கூடும். தாய்வழி உறவினர்களின் ஆதரவு கிட்டும்.

உங்கள் ராசிநாதன் புதன் சூரியன், சனியோடு இணைந்து ஏழாம் இடத்தில்  இருப்பதால் எதிலும் நிதானமாக செயல்பட வேண்டும். இல்லத்தில் இருப்பவர்களுடன் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். கணவன் மனைவி இடையே கருத்து மோதல்கள் வரக்கூடும் என்பதால் அனுசரித்து செல்லுங்கள். முன்கோபத்தை தவிர்த்திடுங்கள். மேலும் புதன், சூரியன், சனி இணைந்து உங்களது ராசியை ஏழாம் பார்வையாக பார்க்க இருக்கின்றது.

ராகு 2-ம் இடத்திலும், கேது எட்டாம் இடத்திலும் தொடர்வதால் வீண் விரயங்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு ஒற்றை தலைவலி, செரிமான கோளாறு, வாய்வுத் தொல்லைகள் வந்து நீங்கும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். வீண் சந்தேகங்கள், பயம், ஈகோவை தவிர்த்திடுங்கள். பணியிடத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மேலதிகாரியிடம் பிரச்சனைகள் தோன்றினாலும், அதனை மற்றவர்களிடம் விமர்சனம் செய்து கொண்டு இருக்க வேண்டாம். வியாபாரத்தில் சுமாரான லாபம் வரக்கூடும்.

கடகம் ராசி ஜனவரி மாதம் ராசி பலன்கள் 2019:

அன்புள்ள கடகம் ராசியினருக்கு, இந்த ஜனவரி மாதம் நினைத்த காரியம் கைக்கூடும் மாதமாக இருக்கப் போகின்றது. உங்களது ஆறாம் இடத்தில்  சூரியன், சனி, புதன் இணைந்து இருப்பதால் அபார ஆற்றல் பிறக்கும். சூரியன் வலுவாக இருப்பதால் அரசு வகையால் அனுகூலம் உண்டு. நல்ல வேலை அமையாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை அமையக்கூடும். சமூகத்தில் உங்களது மதிப்பு, மரியாதை உயரும். பணவரவு அதிகரிக்கக்கூடும். சனி பகவான் 10-ம் இடத்து பார்வை சிறப்பாக இருப்பதால் தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி வியாபாரம் செய்கின்றவர்களுக்கு நல்ல லாபம் வரக்கூடும்.   

சுக்கிரன் குருவுடன் இணைந்து உங்களது ஐந்தாம் வீட்டில் இருப்பதால் தொட்டது துலங்கும். உங்களது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இரண்டு சுபகிரகங்கள் இணைந்து இருப்பதால் திடீர் யோகம் உண்டாகும். சுயஜாதகத்தில் நல்ல தசாபுத்தி நடந்து கொண்டு இருந்தால் அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு நல்ல வளர்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உங்களது மகளுக்கு அல்லது மகனுக்கு நல்ல வரன் அமையக்கூடும். இதுவரை இழுபறியாக இருந்த வந்த பேச்சு வார்த்தைகள் நல்ல விதமாக முடிவடையும். நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல மழலை செல்வம் கிட்டும்.

ராகு பகவான் உங்கள் ராசியில் சாதகமாக இருப்பதால் ஆதாயம் உண்டாகும். செவ்வாய் ஒன்பதாம் வீட்டின் பார்வை சாதகமாக இருப்பதால் புதிய சொத்து, வீடு, மனை வாங்கும் யோகம் இருக்கின்றது. குருவின் ஐந்தாம் பார்வை செவ்வாய் மீது விழுவதால் கேட்கின்ற இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும்.

சிம்மம் ராசி ஜனவரி மாதம் ராசி பலன்கள் 2019:

அன்புள்ள சிம்மம் ராசியினருக்கு, இந்த ஜனவரி மாதம் அனுபவ அறிவாலும், சமயோஜித புத்தியாலும் சாதித்து காட்டும் மாதமாக இருக்கப் போகின்றது. சுக்கிரன் குரு இணைந்து நான்காம் இடத்தில் இருப்பதால் ஆடை, ஆபரணம் சேர்க்கை உண்டாகும். வண்டி, வாகனம் வாங்கும் யோகம் இருக்கின்றது. சிலர் இருக்கும் வாகனத்தை விற்று புதிய வாகனத்தை மாற்றுவீர்கள்.

அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். மேலதிகாரியிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையக்கூடும். சக ஊழியர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்த்திடுங்கள். உறவினர்கள் வருகையால் உற்சாகமாக காணப்படுவீர்கள். சுயதொழிலில் இருந்த வந்த தேக்க நிலை மாறி சூடு பிடிக்க தொடங்கும். வியாபாரம், தொழில் சுமாராக நடைபெறக்கூடும். புதிய யுக்திகளைப் பயன்படுத்தி வியாபாரத்தை பெருக்குவீர்கள்.

சூரியன் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் பிள்ளைகளின் போக்கை கண்டு அவ்வப்பொழுது ஆதங்கபடுவீர்கள். சிலருக்கு அஜீரணம், அடிவயிற்றில் வலி, பல் சம்மந்தமான பிரச்சனை ஏற்படக்கூடும். புதன் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் நன்மை உண்டாகும். சனி ஐந்தாம் வீட்டில் இருப்பதால் கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள், ஏமாற்றங்கள் நினைத்து மனம் கலங்குவீர்கள். அவ்வப்பொழுது  பழைய கசப்பான சம்பவங்களை பற்றி பேசி கொண்டிருக்க வேண்டாம். ராகு 12-ம் வீட்டில் இருப்பதால் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம்.

செவ்வாய் எட்டாம் வீட்டில் இருப்பதால் சகோதர்கள் இடையே கருத்து  வேறுபாடு வரக்கூடும். உங்களது உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். சிறுசிறு மருத்துவ செலவுகள் ஏற்படக்கூடும். குருவின் பார்வை எட்டாம் வீட்டில் விழுவதால் எவ்வித பாதிப்புகளும் உண்டாகாது. இல்லத்தில் இருப்பவர்களுடன் புனித ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். கணவன் மனைவி இடையே ஊடல் மறைந்து ஒற்றுமை புலப்படும்.

கன்னி ராசி ஜனவரி மாதம் ராசி பலன்கள் 2019:

அன்புள்ள கன்னி  ராசியினருக்கு, இந்த ஜனவரி மாதம் சமயோஜித புத்தியால் வெற்றி பெரும் மாதமாக இருக்கப் போகின்றது. சுக்கிரன் குரு இணைந்து மூன்றாம் இடத்தில் இருப்பதால் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கக்கூடும். நினைத்த காரியத்தை நினைத்தபடி முடித்து காட்டுவீர்கள். வேலை விஷயமாக முயற்சி செய்கின்றவர்களுக்கு நல்ல செய்தி வரக்கூடும். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.                       

சனி பகவான் நான்காம் இடத்தில் இருப்பதால் திடீர் இடமாற்றம் உண்டாகும். வேலை விஷயமாக அதிகம் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரக்கூடும். தாயாருடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். இல்லத்தில் இருப்பவர்களுடன் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். யாரையும் தரைக்குறைவாக எண்ணுவதும், பேசுவதையும் தவிர்த்திடுங்கள். நாம் அடிக்கின்ற பந்து திரும்ப நமக்கே வரும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். எவ்வளவு பணம் தாராளமாக வந்தாலும், செலவுகள் ஒரு பக்கம் இருந்து கொண்டு இருக்கக்கூடும்.

செவ்வாய் ஏழாம் இடத்தில் இருந்து கொண்டு ஏழாம் பார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் செயலில் வேகமும், விவேகமும் அதிகரிக்கும். முன்கோபத்தை தவிர்த்திடுங்கள். தாராளமான பணவரவு வரக்கூடும். கணவன் மனைவி இடையே கருத்து மோதல்கள் வந்து நீங்கும். உங்கள் ராசிக்கு மூன்றாம் இடத்தில் இருக்கின்ற குரு ஐந்தாம் பார்வையாக செவ்வாயைப் பார்ப்பதால் உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள்.

சூரியன் நான்காம் வீட்டில் இருப்பதால் தந்தையின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் ராசிநாதன் புதன் நான்காம் வீட்டில் இருப்பதால் புதிய வீடு, மனை வாங்கும் முயற்சி இப்பொழுது கைக்கூடும் . வசதி, வாய்ப்புகள் பெருகும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். பயணங்கள் மேற்கொள்ளும் பொழுது அலைச்சலை கொடுத்தாலும், பல வித அனுபவங்களை பாடமாக கற்றுக் கொடுக்கும்.

துலாம் ராசி ஜனவரி மாதம் ராசி பலன்கள் 2019:

அன்புள்ள துலாம் ராசியினருக்கு, இந்த ஜனவரி மாதம் மறைந்து கிடந்த திறமை வெளிப்படுகின்ற மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் சுக்கிரன் குருவுடன் இணைந்து இரண்டாம் வீட்டில் இருப்பதால் சமயோஜித புத்தியால் பல வித காரியங்களை சாதித்து காட்டுவீர்கள். இல்லத்தில் இருப்பவர்களுடன் ஒற்றுமை புலப்படும். உங்களது பிள்ளைகளின் எதிர்காலம் கருதி எடுக்கின்ற முயற்சிகள் நல்ல விதமாக முடிவடையும். உங்கள் மகள் அல்லது மகன் சம்மந்தமாக சுப செய்தி வரக்கூடும்.

சனி, சூரியன், புதன் இணைந்து மூன்றாம் இடத்தில் இருப்பதால் தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசு சம்மந்தமான காரியங்கள் நல்ல படியாக முடிவடையும். புதன் சாதகமாக மூன்றாம் வீட்டில் இருப்பதால் நினைத்த காரியத்தை நினைத்தபடி முடித்து காட்டுவீர்கள். பால்ய நண்பர்கள், உற்றார், உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.

செவ்வாய் ஆறாம் வீட்டில் இருந்து கொண்டு குருவின் பார்வை இருப்பதால் தொட்டது துலங்கும். தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனம் தெளிவு அடையும். புதிய வேலை அமையக்கூடும். சிலருக்கு அதிக சம்பளத்துடன் கூடிய புதிய வேலை அமையக்கூடும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் வியாபாரத்தை தொடங்கலாம். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பணியிடத்தில் மேலதிகாரி உங்களிடம் முக்கியமான பொறுப்புகளை கொடுப்பார். உங்களது திறமைகள் பளிச்சிடும். மற்றவர்களால் முடிக்க இயலாத விஷயங்களை மிக எளிதாக முடித்து காட்டி, அனைவரின் பாராட்டையும் பெறுவீர்கள்.

சகோதர, சகோதரியிடம் இருந்த வந்த பகை மறைந்து ஒற்றுமை புலப்படும். பெற்றோர்களின் ஆசியும், ஆலோசனையும் கிடைக்கும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்திற்கு ஏற்றபடி மாற்றங்கள் செய்து வியாபாரத்தை பெருக்குவீர்கள். கமிஷன், வட்டி, ப்ரோக்ரேஜ், உணவு, அழகு சாதனங்கள், ஜவுளி, ஹார்ட்வர், நவீன சாதனங்களால் லாபம் வரக்கூடும்.

விருச்சிகம் ராசி ஜனவரி மாதம் ராசி பலன்கள் 2019:

அன்புள்ள விருச்சிகம் ராசியினருக்கு, இந்த ஜனவரி மாதம் கனிவான பேச்சால் சாதித்து காட்டும் மாதமாக இருக்கப் போகின்றது. இம்மாதம் விருச்சிகம் ராசியினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சுக்கிரன் குருவுடன் இணைந்து உங்களது ராசியில் அமர்வதால் இல்லத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். கடந்த மாதங்களில் இருந்து வந்த மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு அடைவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். தெளிவான பாதை புலப்படும். அழகு, இளமை கூடும். ஆடை, ஆபரணம் வாங்கி மகிழ்வீர்கள்.

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஐந்தாம் வீட்டில் இருந்து கொண்டு குருவின் பார்வை இருப்பதால் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி எடுக்கின்ற முயற்சிகள் நல்ல விதமாக முடிவடையும். பிள்ளைகளுக்கு எவ்வித சுபகாரியமும் நடைபெறவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டு இருக்கும் விருச்சிகம் ராசியினருக்கு, இம்மாதம் பிற்பகுதியில் நல்ல முடிவு வரக்கூடும்.

சூரியன் சனியோடு இணைந்து இரண்டாம் இடத்தில் இருப்பதால் செலவுகள் அடுத்தடுத்து இருந்து கொண்டே இருக்க கூடும். அனாவசிய செலவுகளை தவிர்த்திடுங்கள். புதன் இரண்டாம் இடத்தில் இருப்பதால் சொந்த பந்தங்கள் உங்களை நாடி வருவார்கள். இதுவரை உங்களை சரியாக புரிந்து கொள்ளாமல் பகையை பாராட்டியவர்கள் அவர்களது தவறை உணர்ந்து உங்களிடம் சரணடைவார்கள். கண், பல், மூட்டு வலி, முதுகு வலி, சளி தொந்தரவு வந்து நீங்கும். உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். தந்தை வழி சொந்த பந்தங்களுடன் கருத்து வேறுபாடு வரக்கூடும்.

பணியிடத்தில் வேலைச்சுமை குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மந்தமாக இருந்த வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கும். மருந்து, உணவு, ஜவுளி, கெமிக்கல், பெயிண்ட் வகையால் லாபம் உண்டு. நீண்ட நாட்களுக்கு போக நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். மேலும் நல்லவை நடைபெற குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். குலதெய்வம் தெரியாதவர்கள் மறைந்த முன்னோர்களை வழிபட்டு வாருங்கள்.

தனுசு ராசி ஜனவரி மாதம் ராசி பலன்கள் 2019:

அன்புள்ள தனுசு ராசியினருக்கு, இந்த ஜனவரி மாதம் தன்னிச்சையாக செயல்பட்டு வெற்றி பெரும் மாதமாக இருக்கப் போகின்றது. செவ்வாய் நான்காம் வீட்டில் இருப்பதால் மூத்த சகோதர, சகோதரியிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை புலப்படும். உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருக்கின்ற குரு ஐந்தாம் பார்வையாக உங்கள் நான்காம் இடத்தைப் பார்ப்பதால் குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். விலையுர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சிலருக்கு வீடு, வண்டி, வாகன பராமரிப்பு செலவுகள் ஏற்படக்கூடும். சுக்கிரனும் குருவும் இணைந்து பன்னிரண்டாம் வீட்டில் இருப்பதால் பயணங்கள் அதிகரிக்கும். சொந்த பந்தங்கள் வருகையால் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள்.

உங்கள் ராசியில் சூரியன், சனி, புதன் இருப்பதால் சுறுசுறுப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். முன்கோபத்தை தவிர்த்திடுங்கள். அவ்வப்பொழுது கடந்த காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளை நினைத்து பார்த்து கவலைப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். இல்லத்திலும், பணியிடத்திலும் வேலைச்சுமை அதிகரிக்கும் என்பதால் தனுசு ராசியினர் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். தந்தை வழி சொந்த பந்தங்களுடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். தந்தையின் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். ராகு எட்டாம் வீட்டிலும், கேது இரண்டாம் வீட்டிலும் இருப்பதால் அவ்வப்பொழுது இனம் புரியாத பயம், கவலை, வீண் விரயம் ஏற்படக்கூடும்.

வியாபாரத்தில் நல்ல லாபம் வரக்கூடும். புதிய யுக்திகளைப் பயன்படுத்தி வியாபாரத்தை பெருக்குவீர்கள். இரும்பு, கட்டிட உதிரி பாகங்கள், லெதர், கெமிக்கல், உலோகம் வகைகளால் லாபம் வரக்கூடும். ஷேர், கமிசன் வகைகளால் பணவரவு வரக்கூடும். இதுவரை புதிய வியாபாரம், தொழில் தொடங்க எண்ணற்ற தடைகள்,சோதனைகளை சந்தித்து வந்தீர்களே, இனி நிலை மாறக்கூடும். அலுவலகத்தில் உங்களுக்கு கூடுதலான பொறுப்புகள் வரக்கூடும். சிலருக்கு பதவி உயர்வு, இடமாற்றம் ஏற்படக்கூடும். புதிய வேலைக்கு முயற்சி செய்கின்றவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடும்.

மகரம் ராசி ஜனவரி மாதம் ராசி பலன்கள் 2019:

அன்புள்ள மகரம் ராசியினருக்கு, இந்த ஜனவரி மாதம் வளர்ச்சியான மாதமாக இருக்கப் போகின்றது. மூன்றாம் இடத்தில் இருக்கும் செவ்வாயை குரு பார்ப்பதால் தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையக்கூடும். மூத்த சகோதர, சகோதரிகள் உங்களுக்கு தக்க நேரத்தில் உதவ முன்வருவார்கள்.

பணியிடத்தில் அனாவசிய பேச்சுகளை தவிர்த்திடுங்கள். மறைமுக எதிர்ப்புகள், போட்டி, பொறாமை வரக்கூடும் என்பதால் எதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முன்பின் அறிமுகம் இல்லாத நபர்கள் மற்றும் திடீரென்று நண்பர்களாகும் நபர்களிடம் உங்களது அலுவலக ரகசியங்களை சொல்லிக் கொண்டு இருக்க வேண்டாம். புதியதாக செயலில் ஈடுபடும் பொழுது ஒரு முறைக்கு பல முறை சிந்தித்து செயல்படுங்கள். இருக்கின்ற வேலையை விட்டுவிடலாமா என்ற சிந்தனைகள் தோன்றக்கூடும். செய்கின்ற வேலை அல்லது வியாபாரத்தை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தாலே போதுமானது.

 பன்னிரண்டாம் இடத்தில் சூரியன், சனி புதன் இணைந்து இருப்பதால் அதிகம் பயணம் மேற்கொள்ள வேண்டி வரக்கூடும். சிலருக்கு பயணங்களால் அலைச்சலும், வீண் விரயமும் ஏற்படக்கூடும். அவ்வப்பொழுது தூக்கமின்மை, கனவு தொல்லைகள் அதிகரிக்கக்கூடும்.

சுக்கிரன் குருவோடு இணைந்து பதினோராம் இடத்தில் இருப்பதால் தனலாபம் உண்டு. எதிர்பார்த்த பணத்தொகை கைக்கு வரக்கூடும். ஆடம்பர வசதிகள் பெருகும். விலையுர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

வேலைக்காக முயற்சி செய்கின்றவர்களுக்கு நல்ல செய்தி வரக்கூடும். வீடு கட்டுவதற்கான வங்கி லோன் கிடைக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த கேட்கின்ற இடத்தில் இருந்து பணஉதவி கிடைக்கும். இம்மாதம் சுக்கிரன், குரு வலுவாக 11-ம் இடத்தில் இருப்பதால் கல்யாண வாய்ப்பு கைக்கூடலாம். சமூகத்தில் உங்களது மதிப்பு, மரியாதை உயரும்.

கும்பம் ராசி ஜனவரி மாதம் ராசி பலன்கள் 2019:

அன்புள்ள கும்பம் ராசியினருக்கு, இந்த ஜனவரி மாதம் திடீர் திருப்புங்களும், யோகமும் நிறைந்த மாதமாக இருக்கப் போகின்றது. உங்கள் ராசிநாதன் சனி பகவான் பதினோராம் இடத்தில் இருப்பதால் தொழில், வியாபாரத்தில் அபார வளர்ச்சி ஏற்படக்கூடும். சரியான வேலை அமையாமல் இருந்தவர்களுக்கு முயற்சி செய்தால் நல்ல நிறுவனத்தில் இருந்து அழைப்பு வரக்கூடும். அரசு வேலைக்கு முயற்சி செய்கின்றவர்களுக்கு நல்ல செய்தி வரக்கூடும். கட்டிட துறை, ஏற்றுமதி-இறக்குமதி, ஷிப்பிங், கமிஷன், ரியல் எஸ்டேட் வகையால் வருமானம் வரக்கூடும்.

சுக்கிரன் குருவோடு இணைந்து 10-ம் இடத்தில் இருப்பதால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். பொருளாதார வளர்ச்சி மேம்படும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் நடைபெறக்கூடும். தங்கம்,வெள்ளி மற்றும் விலையுர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கு புதிய பொறுப்புகளும், வாய்ப்புகளும் வரக்கூடும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.

இல்லத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.உங்கள் பெயரில் வீடு, மனை, வாங்கும் யோகம் இருக்கின்றது. குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால் பேச்சில் நிதானமும், கவனமும் தேவை. குருவின் பார்வை செவ்வாய் மீது பதிவதால் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கும். இல்லத்தில் இருப்பவர்களுடன் ஒற்றுமை புலப்படும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்கும் யோகம் இருக்கின்றது.

பன்னிரண்டாம் இடத்தில்  கேதுவும், ஆறாம் இடத்தில்  ராகுவும் இருப்பதால் செய்கின்ற முயற்சிகளில் சிறிது தடைகள் தோன்றக்கூடும். விரைவில் முடியும் என்று நினைத்த காரியம் கூட இழுபறியாக முடிகின்ற சூழ்நிலை உருவாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். விட்டுப்போன பிரார்த்தனைகளை இல்லத்தில் இருப்பவர்களுடன் நிறைவேற்றுவீர்கள். பெற்றோர்கள் மற்றும் அனுபவமிக்கவர்களின் ஆலோசனையும், ஆசியும் கிடைக்கும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். புதன் சாதகமாக 11-ம் இடத்தில் இருப்பதால் பிள்ளைகளால் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறக்கூடும்.

மீனம் ராசி ஜனவரி மாதம் ராசி பலன்கள் 2019:

அன்புள்ள மீனம் ராசியினருக்கு, இந்த ஜனவரி மாதம் குதூகலமான மாதமாக இருக்கப் போகின்றது. சுக்கிரன் குருவோடு இணைந்து பாக்கியஸ்தானத்தில் இருப்பதால் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாள் கனவு ஒன்று இப்பொழுது நனவாகும். சுக்கிரன் வலுவாக இருப்பதால் பொருளாதார வளர்ச்சி ஏற்படக்கூடும். விலையுர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். ஆடை, ஆபரணம் சேர்க்கை உண்டாகும்.

இல்லத்தில் எதற்கெடுத்தாலும் சண்டை, சச்சரவு என்று இருந்து வந்த நிலை மாறி நிம்மதியான சூழ்நிலை உருவாகும். உற்றார், உறவினர்களுடன் இருந்து வந்த பகை மறையக் கூடும். இல்லத்தில் மங்கள ஓசை கேட்கும். வாழ்க்கைத் துணையின் சொந்த பந்தங்கள் வழியால் ஆதாயம் உண்டாகும்.

சூரியன், சனி, புதன் இணைந்து உங்களது பத்தாம் இடத்தில் இருப்பதால் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பணியிடத்தில் உங்களது செல்வாக்கு உயரும். அரசு காரியங்களில் வெற்றி கிட்டும். தந்தை வழியால் அனுகூலம் உண்டு. புதிய பொறுப்புகள் தேடி வரக்கூடும். சிலருக்கு தலைமை பொறுப்புகளும், பதவிகளும் வரக்கூடும்.

மாதம் முழுவதும் செவ்வாய் உங்களது ஜென்ம ராசியில் இருந்து கொண்டு குருவின் பார்வை இருப்பதால் செயலில் வேகமும், விவேகமும் உண்டாகும். சுறுப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். உடல் உஷ்ணத்தால் உபாதைகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வேனல் கட்டி, நெருப்பு காயங்கள், கண் வலி, அடிவயிற்றில் வலி ஏற்படக்கூடும் என்பதால் உடல் நலனில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள்.

கேது பகவான் 11-ம் இடத்தில் இருப்பதால் செய்கின்ற தொழிலில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் வரக்கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். இருக்கின்ற கடையை அல்லது தொழிலை விரிவாக்கம் செய்ய, அழகு படுத்துவதற்கு போதிய அளவிற்கு பணவரவு வரக்கூடும். சிலருக்கு கேட்கின்ற இடத்தில்  பணஉதவி கிடைக்கும். தேங்காய் மண்டி, தானிய வகை, துரித உணவகம், ஜவுளி, ஸ்டேஷனரி வகைகளால் லாபம் வரக்கூடும்.