ஜல்லிக்கட்டு உருவானதன் காரணம் தெரியுமா?!


d7375c57762b44f595529380de6c0234-1

ஒருமுறை புருசனும், பொண்டாட்டியும் தோட்டத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்ப நகையும், பட்டுமா உடுத்தி இருந்த பொண்டாட்டியை பார்த்து இப்படி நீ சீரும் சிறப்புமா இருக்க என் உழைப்புதான் காரணம்ன்னு புருசன்  சொன்னானாம். அப்படியா?!ன்னு மனைவி கேட்க, அதுக்கு இல்லன்னு சொல்றமாதிரி பக்கத்துல இருந்து மாடு தலை அசைத்ததாம்.வயலில் காளைமாடும், வீட்டில் பசுமாடும் உழைப்பதால்தான் நமக்கு இந்த வாழ்வும் வந்துச்சுன்னு மனைவி பதில் சொல்ல, அதுக்கு ஆமோதிப்பது மாதிரி பசுமாடு தலையசைக்க மோதிபார்க்கலாமா?!ன்னு கணவன் விளையாட்டாய் இறங்க, அப்படி உருவானதே ஜல்லிக்கட்டுன்னு ஒரு கதை சொல்வாங்க.

 தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு என்னும் மாடுபிடி விளையாட்டு இந்நாளில் நடைபெறும். கொல்லேறு தழுவுதல், மஞ்சு விரட்டு என்கிற பெயர்களும் இவ்வீரவிளையாட்டிற்கு உண்டு. முன்பு, இந்திய நாணயமாகிய சல்லிக் காசுகளை மாடுகளின் கொம்பில் கட்டிவைத்திருப்பார்கள். மாட்டை அடக்குபவர்களுக்கே அந்த காசு பரிசளிக்கப்படும். இந்த சல்லிக்காசே பின்பு ஜல்லிக்கட்டாக மாறி அழைக்கப்பட்டது. வேலி ஜல்லிக்கட்டு, வாடிவாசல் ஜல்லிக்கட்டு, வடம் ஜல்லிக்கட்டு என இதற்கு பல பெயர்கள் உண்டு.

 பொங்கல் பொங்கிவரும்போது கொஞ்சம் நீரினை அள்ளி, அதை வயல்வெளிகளுக்கும், மாடுகளுக்கும் குடிப்பாட்டவும் செய்வர். ‘பொங்கலோ பொங்கல், மாட்டு பொங்கல்.. பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக…‘ ன்னு பாடிக்கிட்டே மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பது வழக்கம். இதுக்கு. தண்ணீர் தெளித்தல் ன்னு பேரு. .மாட்டுப்பொங்கலன்று முறைமாப்பிள்ளைமீது மஞ்சள் நீர் தெளிப்பது தமிழக கிராமங்களில் இன்றும் உண்டு. 

ஜல்லிகட்டுக்காக வளர்க்கப்படும் மாடுகளுக்கு தினத்துக்கு பாதாம், முந்திரி, மூலிகை செடிகள்ன்னு உணவே ஸ்பெஷலா இருக்கும். மனிதர்களுக்கு போலவே குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவபரிசோதனைன்னு கவனிப்பு உச்சத்தில் இருக்கும்.  வீரத்தை காட்டவேண்டிய இடத்தில் காட்டனும். பாசத்தை காட்ட வேண்டிய இடத்தில் பாசத்தை காட்டனும். இதுக்கு சரியான உதாரணம் காளைமாடுகளே!  தன்னோட உரிமையாளர்கள்மீது அம்புட்டு பாசமா இருக்கும். முக்கியமா அந்தவீட்டு பொண்ணுங்கமேல காளைகளுக்கு பாசம் அதிகம். பொண்டாட்டி பின்னாடி சுத்தும் புதுமாப்பிள்ளை மாதிரி, ஆக்ரோஷமாய் ஜல்லிக்கட்டு களத்தில் திரியும் காளை, ஜல்லிக்கட்டு மைதானத்தை விட்டு வந்ததும் அந்த வீட்டு பொண்ணுங்களுக்கு பொட்டி பாம்பாய் அடங்கிடும். ஜெயித்தவர்களுக்கு பெண் மட்டுமல்ல பெண்ணை கட்டி குடித்தனம் செய்ய சீரும் கிடைக்கும். சிலசமயம் உயிரும் போகும்.

எது எப்படியோ தமிழனின் வீரத்துக்கு அடையாளமாய் இன்றளவும் ஜல்லிக்கட்டு தொடருது.

அனைவருக்கும் மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...