ஹிமாச்சலில் கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சிறுத்தைகள் ஊருக்குள் புகுந்து பொதுமக்களைத் தாக்கின.

மணாலி அருகே உள்ள பழைய மணாலி பகுதியில் இன்று அதிகாலை ஊருக்குள் புகுந்த 2 சிறுத்தைகள் ஒரு இளைஞரையும் 3 நாய்களையும் தாக்கின. இதில் படுகாயமடைந்த அந்த இளைஞர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அந்த சிறுத்தைகள் இரண்டும் ஹாட் ஹட் என்ற இடத்தில் உலா வந்தன.

அங்கு ஒரு நபரைத் தாக்கியதைத் தொடர்ந்து ஒரு சிறுத்தையை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதிக்குள் விடுவித்தனர். இரண்டாவது சிறுத்தையைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.