ஜே.கே ரித்திஷ் மறைவுக்கு நாசர்வரலட்சுமி, கஸ்தூரி, இரங்கல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரபல திரைப்பட நடிகருமான ஜே.கே ரித்திஷ் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் நேற்று மதியம் 3.000 மணியளவில் இராமநாதபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் மரணமடைந்தார்.

சமீபத்தில் வந்த எல்.கே.ஜி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். நடிகர் ஆர்.ஜே பாலாஜி அந்த வேடத்துக்கு ரித்திஷ் நடித்தால்தான் நன்றாக இருக்கும் என நினைத்து நீண்ட வருடம் சினிமாவில் நடிக்காமல் இருக்கும் ரித்திஷை இப்படத்தில் நடிக்க வைத்தார்.

நடிகை வரலட்சுமி ரித்திஷ் மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். நல்ல உள்ளம் படைத்தவர் மனித நேயம் கொண்டவர் எனவும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதே போல் கஸ்தூரியும்
ரித்தீஷ் மரணம் அடைந்தார் என்று நம்பவே முடியவில்லை. மிக பெரிய அதிர்ச்சி . சிறிது நாட்களுக்கு முன்னர் கூட அவருடன் உரையாடிக்கொண்டிருந்தேனே ! ஐயோ கடவுளே! போற வயசே இல்லை. மனுஷனுக்கு கட்டம் வைச்ச கணக்கு என்னான்னு புரியவேயில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதே போல் நடிகர் நாசர் வெளியிட்டுள்ள செய்தியில்

ரித்திஷின் மறைவு குறித்து கேள்விப்பட்டவுடன் அந்த அதிர்ச்சியிலிருந்து நான் இன்னும் மீளவில்லை. ரித்திஷ் உடல்நலத்தில் அக்கறை செலுத்துவார். தென்னிந்திய நடிகர் தேர்தலில் அவருடன் பயணித்தேன். அரசியலில் தீவிரமாக ஈடுபாடு கொண்டவர். நல்ல தம்பியை இழந்துவிட்டேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.