எதுக்கும் ஒரு எல்லையே இல்லையா மீரா மிதுன்..?

பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி மூன்றாவது வாரம் முடியப் போகிறது. சண்டை குறைந்துவிட்டாலும், தன் முகத் திரையை மறைத்துக் கொண்டு பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் மீரா மிதுன். பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த இவர், வந்த முதல் நாளே அனைவரிடமும் சண்டையிட்டு பகையினைப் பெற்றிருந்தார். தற்போது அது அடுத்த கட்டத்திற்கு சென்று அனைவரிடமும் பகையாக மாறிவிட்டது.

எதுக்கும் ஒரு எல்லையே இல்லையா..?


மீரா மிதூனுக்கு வனிதா மற்றும் சேரன் என்றால் எட்டிக்காய்தான் எப்போதும். மீரா உள்ளே நுழைந்த அன்று சேரனிடம் தான் பெட்டை கடன் வாங்கினார், வேலை செய்யாமல் ஓப்பி அடிக்கிறார் என்று மீரா மிதூன் மீது சேரன் புகார் கூறினார். 


சேரன், கழிவறையை சுத்தம் செய்யும் போது மீரா மிதூன் உடனில்லை என்று கூறினார். அதற்கு மீரா மிதுன் என்னைப் பற்றி நீங்கள் போலியான பிம்பத்தை உருவாக்குகிறீர். நான் எப்போதும் வேலை செய்யவே செய்கிறேன் என்று கூறினார். அதை ஏற்க மறுத்தார் சேரன். அதனால் இருவரும் வாதம் முற்றி மீரா மிதுன் வெளியே உள்ள புல்வெளிக்கு எழுந்து சென்று விட்டார்.



எப்போதும் வேலையை ஒழுங்காக செய்வது கிடையாது. மற்றவர்கள் பேசும் போது கூட பேசுவது கிடையாது, ஏதாவது முடிந்த பிரச்சினையைப் பேசி பேசி  சண்டையை அதிகமாக்குவது போன்று ஏதாவது ஒரு பிரச்சினை செய்து கொண்டே இருப்பதுதான் மீரா மிதுனின் வழக்கம்.