இனி வீட்டிலேயே செய்யலாம் ரோட்டுக்கடை சிக்கன் 65..

72e1e4d487e3017c1f5cb57046e0a4d1

என்னதான் விதவிதமாய் பெரிய ஹோட்டல்களில் சாப்பிட்டாலும் சில உணவுவகைகளை சின்னஞ்சிறிய கடைகளில் சாப்பிடும் சுவை கிடைக்காது. அப்படிப்பட்ட உணவுவகைகளில் ஒன்றுதான் சிக்கன் கபாப் என சொல்லப்படும் சிக்கன் 65. இனி, அதே சுவையில் வீட்டிலேயே செய்யலாம் ஈசியாய்…

68b0d7ff3ebca150c6edad20ec6b5b5a

தேவையான பொருட்கள்

1. சிக்கன் – 1/2 கிலோ
2. முட்டை – 1
3. தயிர் – 1/2 கப்
4. மைதாமாவு – 1 மேஜைக்கரண்டி
5. கார்ன் மாவு – 1 மேஜைக்கரண்டி
6. வற்றல் தூள் – 1 1/2ஸ்பூன்
7. இஞ்சி,பூண்டு விழுது – 1 ஸ்பூன்
8. எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
9. உப்பு – தேவையான அளவு
10. எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை;

முதலில் அகலமான பாத்திரத்தில் மைதாமாவு,கார்ன்மாவு,முட்டை,வற்றல் தூள், இஞ்சி, பூண்டு விழுது,எலுமிச்சை சாறு,உப்பு ,தயிர் சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும். 1 – 2 மணிநேரம் ஊறவிடவும். பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிக்கன் துண்டுகளை போட்டு சிவக்க வறுத்து எடுத்து கொள்ளவும். மிளகுத்தூள் தூவி பரிமாறலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews