Connect with us

தோனி ஓய்வு குறித்த தகவல்கள் வீண் வதந்தியே- ஷாக்சி தோனி

விளையாட்டு

தோனி ஓய்வு குறித்த தகவல்கள் வீண் வதந்தியே- ஷாக்சி தோனி

இந்திய அணியின் கேப்டனாகவும், கிரிக்கெட் உலகில் தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தினைக்  கொண்டவருமான தோனி, 2019 ஆம் ஆண்டின் உலகக் கோப்பையில் தனக்கே உரித்தான சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தவில்லை.

இதனால் தோனி மீது பல சர்ச்சைகள் எழுந்தன, முன்னாள் கிரிக்கெட் வீரர்களும்கூட, உலகக் கோப்பையில் இவருடைய ஆட்டத்தினை விமர்சனம் செய்தனர்.

இந்தப் பிரச்சினை கடைசியில் ரசிகர்களிடையே பிளவினை ஏற்படுத்தியது. அப்போது இருந்து தோனி எப்போது ஓய்வு பெறுவார் என்ற கேள்வி நிலவி வருகிறது.

அதன்பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் ஆடுவாரா என்று எதிர்பார்த்த நிலையில், ராணுவப் பயிற்சிக்காக இரண்டு மாதங்கள் விடுமுறை எடுத்துக் கொண்டார்.

15 ஆம் தேதி தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலும் தோனியின் பெயர் இடம் பெறவில்லை.

தற்போது விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில்‘‘ தோனியுடனான அந்த போட்டியை என்னால் மறக்க இயலாது. ஸ்பெஷல் நைட்’’ என பதிவிட, அது மீண்டும் சர்ச்சையாகியுள்ளது.

கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் “ஓய்வு குறித்து தோனி பிசிசிஐ யிடம் எதுவும் தெரிவிக்கவில்லை” என கூறினார்.

தற்போது டுவிட்டரில் தோனியின் மனைவி சாக்‌ஷி, “கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெறுவதாக வெளியாகும் தகவல்கள் எல்லாம் வதந்திகள்” என பதிவிட்டுள்ளார்.

வீடியோக்களைப் பெற Subscribe செய்யவும் இங்கே:
Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top