Connect with us

சீன விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: ராகுல் காந்திக்கு காயமடைந்த ராணுவ வீரரின் தந்தை பதிலடி!

செய்திகள்

சீன விவகாரத்தில் அரசியல் வேண்டாம்: ராகுல் காந்திக்கு காயமடைந்த ராணுவ வீரரின் தந்தை பதிலடி!

இந்தியா மற்றும் சீனா ராணுவ வீரர்களுக்கு இடையே சமீபத்தில் நடைபெற்ற மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணமடைந்தனர் என்பது தெரிந்ததே. இந்திய வீரர்களின் உயிரிழப்பிற்கும் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது

ராணுவ வீரர்களை எப்படி ஆயுதங்கள் இல்லாமல் அனுப்பலாம் என்பது உள்பட பல கேள்விகளை காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி அதிரடியாக கேட்டார். மேலும் சீன ராணுவத்துக்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டி இருந்தார்

இந்த நிலையில் ராகுல் காந்திக்கு இந்திய ராணுவ வீரர் ஒருவரின் தந்தை பதிலடி கொடுத்துள்ளார். இந்திய ராணுவம் வலிமை மிக்கது என்றும் சீனாவை வீழ்த்தும் ஆற்றல் பெற்றது என்றும் ராகுல் காந்தி தயவு செய்து இது அரசியல் செய்யக்கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்

கான்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் காயம் அடைந்த இந்திய வீரரின் தந்தையான இவர் மத்திய அரசு மீதான ராகுலின் குற்றச்சாட்டிற்கு இந்த பதிலடியை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் எனது மகன் ராணுவத்தில் சேர்ந்து போராடினான் என்றும் ராணுவத்தில் தொடர்ந்து போராடுவா என்றும் சீனா மோதல் விவகாரத்தில் மத்திய அரசு மீதான ராகுலின் குற்றச்சாட்டிற்கு சீன படைகளால் காயமடைந்த இந்திய ராணுவ வீரரின் தந்தை பதிலடி கொடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இருப்பினும் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மத்திய அரசு எடுக்கும் முடிவுக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சிகளும் கூறியிருப்பது பாசிட்டிவாக கருதப்படுகிறது

Continue Reading
To Top