இந்திய வீரர்களின் காயத்தால் வருத்தத்தில் இந்திய ரசிகர்கள்

இந்திய அணியின் முக்கிய ஆல்-ரவுண்டர் ஹர்திக் பண்டியாவும் விஜய் ஷங்கரும் பயிற்சியின் போது காயமடைந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனால் இந்திய ரசிகர்கள் மிகுந்த அதிருப்திக்கு ஆளாயினர். 12-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்கவிருக்கிற நிலையில், உலகக்கோப்பைத் தொடருக்கு முன்னதாக பயிற்சிப் போட்டிகள் 10 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே வலைப்பயிற்சியில் அனைத்து இந்திய வீரர்களும் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது பயிற்சியில் இருந்த ஹர்திக் பண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது. இந்திய மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றபோது கேப்டன் விராட் கோலி, கேதார் ஜாதவ் தவிர்த்து அனைத்து வீரர்களும் பயிற்சிப் போட்டியில் ஆடவுள்ளனர் எனத் தெரிவித்து இருந்தார். அதேபோல் ஹர்திக் பண்டியாவும் ஆடி, 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

விளையாட்டு வீரர்களின் தொடர் காயத்தால் வருத்தத்தில் ரசிகர்கள்

 இதனை வைத்துப் பார்க்கையில் காயம் ஏதும் பெரிதில்லை எனக் கருதப்படுகிறது. ஒருவேளை ஆல் ரவுண்டர் ஹர்திக் பண்டியாவின் காயம் பெரிதாக இருந்தால் அது உலகக்கோப்பை தொடரில் பெரும் பின்னடைவாக அமையும். இதற்கு முன்னதாக பயிற்சிப் போட்டியில் முன் விஜய் ஷங்கர் காயமடைந்தார். அதனால், அதனை அடுத்து வந்த பயிற்சிப் போட்டியில் அவர் பங்கேற்காமல், இரண்டாம் பயற்சிப் போட்டிக்கு தயாராகிவிட்டார். இவர் இந்திய மற்றும் வங்காளதேச அணிகளுக்கு இடையேயான போட்டியில் 2 ரன்னுடன் ஆட்டமிழந்தார்.

 இந்திய அணியின் தொடர் காயம் ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி இருந்தது,  அதனால் சிறிது பதற்றத்திலேயே இந்திய ரசிகர்கள் இருந்தனர். இந்திய வங்கதேசத்திற்கிடையேயான போட்டியில் இந்தியாவின் வெற்றி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.